நான் காலம் பேசுகிறேன் எனக்கு என் கடமையை செய்துதான் பழக்கம் வெட்டிப்பேச்சு பேசி பழக்கமில்லை, ஆனால் உங்களை உருவாக்கியவன் என்கின்ற முறையில் உங்களிடம் கொஞ்சம் பேச எண்ணுகிறேன். உங்களுக்கு நான் கொடுத்த ஆறாம் அறிவை அகந்தைக்கு பயன்படுத்தினீர்கள். உங்கள் அறிவை அழிவிற்கு பயன்படுத்தினீர்கள். எல்ல உயிர்களுக்காகவும் படைக்கப்பட்ட பூமியை உங்கள் சொந்த உபயோகத்திற்காக அழிக்கத் தொடங்கினீர்கள். உங்கள் கழிவுகளால் புனிதமான நதிநீரை கெடுத்தீர்கள். நச்சு புகைகளால் பூமியை வெப்ப காடாக்கினீர்கள். உங்களை பெரியவன் என்று நிரூபிக்க நீங்கள் செய்த கேவலங்களை பார்க்க சகிக்காமல் உலகம் உங்கள் கையில் இல்லை என்பதை நிரூபிக்க சுனாமிகளையும், பூகம்பங்களையும் உங்களுக்கு கொடுத்தேன் ஆனாலும் உங்கள் ஆணவம் அடங்காமல் அணுஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு உலகை அழிக்கிறேன் என்று புறப்பட்டுவிட்டீர்கள். அட முட்டாள் மனிதர்களே! நீங்கள் அழிக்க நினைப்பது நான் படைத்த ஒரு சிறிய உருண்டையை. நீங்கள் கற்பனைகூட செய்யமுடியாத பிரபஞ்சத்தை காட்டுகிறேன். அதை பார்த்த பிறகு யார் பெரியவர் என்கின்ற முடிவெடுங்கள். நீங்கள் மேலே பார்க்கும் படத்தில் உள்ளதுதான் பூமி. இப்போது உங்கள் பூமி பெரியதாக உங்கள் கண்களுக்கு தெரியலாம் ஆனால் என்னுடைய படைப்பின் துவக்கமே தவிர முடிவல்ல.
இப்போது தெரிகிறதா உங்கள் பூமி எங்கே இருக்கிறது என்று.என்னுடைய படைப்பின் ரகசியம் அறிந்தவர் யாரும் தன்னை எல்லாவற்றிலும் மேலானவன் என்று கர்வப்படமாட்டார்கள், அனைத்தும் எனக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடமாட்டார்கள். தனக்கு, தனக்கு என்று சுயநலமாக இருக்கமாட்டார்கள். என்னுடைய படைப்பு இதோடு முடியவில்லை பாருங்கள் இன்னும் காட்டுகிறேன். உங்கள் பூமி எங்கு இருக்கிறது தெரிகிறதா? உங்கள் பூமியின் நிலை இதோ நீங்கள் பார்க்கும் நிலையில்தான் உள்ளது ஆனால் இதுவும் முடிவல்ல.இப்போது கர்வப்பட யார் இருக்கிறார்கள் பூமியில் நான்தான் பெரியவன் எனக்கே எல்லாம் சொந்தம் என்று கர்வப்படுபவன் அடிமுட்டாள் என்றே கருதிக்கொள்ளலாம். இன்னும் என் படைப்பை நான் காட்டுகிறேன் அதையும் பாருங்கள்
பெரிய சூரியணே அதைவீட பெரிய அர்ச்டுருஸ் (ARCTURUS) முன்னால் எவ்வளவு சிறியவையாக காட்சிதருவதை பார்கிறீர்கள் அல்லவா. இப்போது எங்கே உங்கள் பூமி? அதற்குள் ஏன் பைனாகுலரை தேடுகிறீர்கள். பூமியின் அளவுகோல் மிகசிறியது என்று உங்களுக்கு இப்போது தோன்றினால் உங்கள் அளவுகோல் என்ன? சரி என்னுடைய முழு படைப்பையும் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்யுங்கள். என்னை யார் போற்றினாலும், தூற்றினாலும் எதற்கும் சந்தோசமோ, வருத்தமோ படப்போவதில்லை.
உங்கள் அகந்தையை, பெரியவன், சிறியவன் என்கின்ற வேறுபாட்டினை கழைந்துவிட்டு உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி பாருங்கள் நான் இப்போது உங்கள் கண்களுக்கு என் முழு வடிவையும் காண்பிக்கிறேன். நான்தான் முலாதார சக்தி. நான் அன்னிச்சையாக செயல்படுபவன். நான் எல்லோருக்கும் சமமானவன். என்னை புரிந்துகொண்டவர்கள் ஞானி ஆகிறார்கள் அவர்கள் மறுபடியும் பிறப்பதில்லை. என்னை புரியாதவர்கள் மற்றும் புரிய முயற்சிக்காதவர்கள் மறுபடியும் பிறக்கிறார்கள். அவர்களது பிறப்பும், இறப்பும் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். எனக்கு முக்காலமும் தெரியும். நேற்று நடந்தது, இன்று நடப்பது மற்றும் நாளை நடக்கப்போவது எல்லாம் எனக்கு தெரியும் ஆனால் என்னால் எதையும் தடுக்க இயலாது. நான் அனைத்தும் அறிந்தவனாக இருந்தாலும் எனக்கும் விதியை மாற்றும் சக்தி கிடையாது ஆகையால் நான் கர்வப்பட்டு பயனில்லை . எதுவும் என் கையில் இல்லை அதனால் நான் கர்வப்படுவதில்லை. இதை உங்களுக்கு உணர்த்தவே இப்போது பேசினேன்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக