புதன், ஆகஸ்ட் 01, 2012

மரணம்


ஒரு வார்த்தை கேட்டால் நமக்கு நடுக்கம் வருகிறதே அந்த வார்த்தையை கேட்ககூட நாம் விரும்புவதில்லை. ஆனால் வாழ்கையில் ஒவ்வருவரும் சந்திக்கபோகிற விஷயம். தினமும் எங்கோ ஒரு இடத்தில் நிகழ்த்துகொண்டிருக்கும் விஷயம். யாரும் விரும்பாத விஷயம் அப்படி விரும்பினாலும் அதை செயலபடுத்த பயம்கொள்ளும் விசயம் "மரணம்". ஒரு குழந்தை இந்த உலகத்தில் ஜனிக்கும்போது அதன் முடிவும் எழுதப்பட்டுவிடுகிறது. அப்படிப்பட்ட மரணம் தனக்கு வரக்கூடாது என்பதில் எல்லோரது நம்பிக்கையாக இருக்கிறார்கள். பலர் தங்களுக்கான மரணம் வருவதற்கு முன்பே மரணபயத்தில் தாங்களே மரணத்தை வரவழைத்து கொள்கிறார்கள். மரணம் என்ற வார்த்தை கேட்டாலே மரணம் வந்துவிட்ட பயம்தான் ஒரு மனிதனை அதிலிருந்து தப்பிக்க பலவாறான தவறுகளை செய்யவைக்கிறது. ஒவ்வரு மரணமும் நமக்கு கற்றுத்தருவது என்ன? நீயும் ஒருநாள் மரணமடைவாய் அதனால் தலைகனத்தோடு ஆடாதே என்பதை எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடிந்தது. நாளை இறக்கப்போகும் மனிதன் இன்று இறந்தவனை பார்த்து அழுகிறான். இந்த மரணம் வாழ்கையைவீட சிறந்ததாக நினைத்து செய்யும் தற்கொலைகூட துன்பமுள்ள வாழ்கையைவீட கொடுமையானது. 

பகவத்கீதை சொல்கிறது "மரணம் என்பது உடலுக்கு மட்டுமே ஆத்மாவிற்கு மரணம் கிடையாது. ஆத்மாவை யாராலும் கொல்லமுடியாது, தண்ணீரால் நனைக்கமுடியாது, காற்றால் உலர்த்த முடியாது. நாம் அணியும் சட்டை பழையதாகி கிழிவது போல உடலாகிய சட்டை கிழிந்து வேறொரு உடல் என்னும் புதிய சட்டைக்குள் புகுகிறது. ஆத்மாவை கொன்றதாக நினைப்பவனும், கொலைசெய்யப்பட்டதாக நினைபவனும் முட்டாள்களே". ஆகவே மரணத்தை பார்த்து பயம்கொள்வது கூடாது. முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியமும் மரணமில்லாத வாழ்கையும் என்றுமே அர்த்தம்தராது.   

மரணம் என்பது இயற்கை நமக்கு கொடுத்த சுழற்சிமுறை. பிறப்பதும் பின்பு இறப்பதும் மீண்டும் பிறப்பதும் காலத்தால் நடந்துகொண்டே இருப்பவை. எந்த மனிதனும் இறக்காமல் இருக்கப்போவதில்லை அப்படியானால் யாருக்காக, எதற்காக "தான்" என்கின்ற ஆணவத்தோடு அலைகின்றான்?.தன் உயிர் எங்கிருக்கிறது என்பதுகூட அறியாதவன் எப்படி அடுத்தவர் உயிரை எடுக்கிறான்?. ஒவ்வருவரும் தனக்குள்ளேயே ஒரு மயானத்தை வைத்துக்கொண்டு அடுத்தவருக்காக ஒரு மயானம் தேடுவதுதான் வேடிக்கையாக உள்ளது. மரணத்தை ஒத்திப்போடலாமே தவிர மரணம் வராமல் தடுக்க யாராலும் முடியாது. அத்தகைய ஒத்திப்போடல்தான் மனிதன் இயற்கையை தன் அறிவால் வென்றுவிட்டதாக வந்த ஆணவம். எங்கு சென்றாலும் பின்தொடரும் மரணத்தை கண்டு பயப்படுவதும் தவறு, மரணத்தை அறிவால் வென்றுவிட்டதாக ஆணவம் கொள்வது தவறு. இரண்டுமே அறியாமையால் நிகழ்வது. உண்மையை அறிந்தவர் பயப்படவும்மாட்டார்கள், ஆணவப்படவும்மாட்டார்கள். மரணம் என்பது முழுஅமைதி அந்த அமைதியை மனதுள் பார்க்க பழகியவர்கள் மரணத்தை வீட மேலானவர்கள் அத்தகைய மரணம் வரும்வரை அமைதியாக காத்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக