" சாட்டை" இந்த படம் ஒரு விழிப்புணர்வுமிக்க படம். இந்த படம் நான் மிகவும் ரசித்த நம்மவர் படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.இந்த படம் வெறும் படமாக இல்லாமல் பாடமாக மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறது. ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு படிக்காத மாணவனையும் படிக்கவைக்கலாம் அதற்கு கொஞ்சம் அன்பு காட்டுங்கள் என்று சொல்லித் தருகின்றது இப்படம். சமுத்திரகனி அவர்கள் இப்போது உள்ள கல்வியின் அழுத்தம் எத்தகையது என்கின்ற ஒரு விழிப்புணர்வை படத்தில் நன்றாக வெளிப்படுத்தி இருக்கின்றார் . படிப்பை காசாக்கும் கல்வி நிலையங்கள், ஏழைகள் அவர்களுது குழந்தைகள் அரசு பள்ளியில் யாரும் கவனிப்பாரற்று மற்றொருபுறம் என்று கல்வி பல கேள்விகளை நமக்கு இன்று விடைதேடும் வேலையை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறந்த மாணவனை, ஒரு சிறந்த சமுதாயத்தை நாம் படைக்க தவறும்போதெல்லாம் அந்த சமுதாயம் மிக மோசமான தீவிரவாதம், போதைக்கு அடிமை என்று நதியாக ஓடவேண்டியது இன்று குட்டையாய் தேங்கி அதுவே
சாக்கடையாய் மாறிவிடுகின்றது. இதற்கு காரணம் தேடுவதை விட்டுவிட்டு நம்மிடம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வோம்.கல்வியின் தரம் உயர்த்தவேண்டும் என்கின்ற சிந்தனை மட்டுமே நாம் கருத்தில் எடுக்கவேண்டிய முக்கிய விஷயம் இப்போது.
கல்வி அறிவு எல்லோரும் பெறவேண்டும், தவறு செய்யும் ஒவ்வருவரும் திருந்தி நல்வழியில் சமுதாயத்தை உயர்த்தவேண்டும் என்கின்ற இலட்சியத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் முயற்சி கண்டிப்பாய் பாரட்டப்படவேண்டிய ஒன்று. இப்படி ஒரு ஆசிரியர் ஒவ்வருவர் வாழ்விலும் கிடைக்கவேண்டும், அப்படி எனக்கு கிடைத்த நல்ல ஆசிரியர்களை நினைத்து அவர்களுக்கு இப்போது என் மனமார்ந்த நன்றிகளை சொல்ல விரும்புகிறேன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக