ஞாயிறு, அக்டோபர் 21, 2012

"மாற்றான்" மற்றும் "சாருலதா" - படங்களில் (+) மற்றும் (-)

 மாற்றான் 

 
சாருலதா 


தற்போது வெளியாகியுள்ள "மாற்றான்" மற்றும் "சாருலதா" இரண்டுமே உடன் பிறப்புகள் ஒட்டி பிறந்து ஒருவர் இறந்து மற்றொருவர் தன்  உடன்பிறப்பின் காதலை மற்றொருவர் அடைவது
என்கின்ற ரீதியில்  எடுக்கப்பட்ட படம். இந்த இரு படங்களில் உள்ள (+) மற்றும் (-)  பற்றி பார்போம்.
 
"மாற்றான்" 
 
 
(-)
 
*சூர்யா படம் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது சூரியாவின்  முழுமையான நடிப்பு திறமை + வெகுளித்தனம் + உழைப்பு + முயற்சி. "ஏழாம் அறிவு" படத்தில்  சூர்யா உண்மையான போதிதருமராக நடித்து உண்மையான போதிதருமராகவே காட்சியளித்தார். அத்தகைய சூர்யா இளைய சமுதாயத்திற்கு ஒரு பாடமாக இருந்தார். இதுவரை அவர் நடித்த படம் எதுவும் மாற்றான் அளவிற்கு மோசமானதாக இல்லை. படம் சரியில்லை பிளாப் என்று ஒரே வரியில் முடிந்துவிடும். ஆனால் மாற்றான் படத்தில் சூரியாவே சரியில்லை என்பதுதான்
பிரச்சனை. அண்ணன் காதலியை அண்ணன் இறந்ததும் தன் காதலியாக்குவது என்பது  
உறவுகள் பற்றிய உணர்வுகளை தவறாக அல்லவா இளைஞர் மத்தியில் காட்டுகிறது.   
 
* ஒரு தமிழ் படத்தை தமிழ் படம் பாணியிலேயே எடுக்கலாமே அதைவிடுத்து ஏன் ஆங்கில படம் போன்று ஒரு சண்டை காட்சி? ஆங்கில படம் போன்ற ஒரு அமைப்பு?. எதற்கு இப்படி ஒரு ஆங்கில படம் எடுக்க  எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். அதற்கு  பேசாமல் ஒரு ஆங்கில படத்தை பார்த்துவிடலாமே   எதற்கு சூர்யா படத்திற்கு வரவேண்டும்.  
 
* ஒரு சூர்யா நல்லவன் ஒரு சூர்யா கெட்டவன். ஒருவன் இறந்ததும் இன்னொரு சூர்யாவிற்கு இதையம் மாற்றப்பட்டதும் கெட்ட சூர்யா நல்ல சூர்யாவாக உருமாறுகிறார். இறந்த அண்ணன் காதலி  காஜல் அகர்வாலை தன் காதலி ஆக்குகிறார். என்ன ஒரு நல்ல எண்ணம்.
 
* படம் முழுக்க கொலைகள் கேவலமான வசனம். வெளிப்படையான உதட்டு முத்தம். பெண்கள் குடிப்பது என்று எதற்கும் சென்சார் போர்ட் இல்லாமல் எல்லோரும் எப்படிதான்  குடும்பத்துடன் படம் பார்ப்பது  என்பதுதான் கேள்வி. 
  
(+)
 
* படத்தில் பாரதியாரை நியாபகப்படுத்தியது. கலீல் ஜிப்ரான் கவிதைகளை அறிமுகப்படுத்தியது. ஒரு பாடல் மிகச்சிறந்த முறையில் படமாக்கியது இவை தவிர வேறு எதுவும் மனதில் பதியவில்லை.
 
என்னை பொறுத்தவரை சூரியாவிட்கு இந்த படம் வணிக ரீதியாக வெற்றி அடைந்தாலும் தரத்தின் அடிப்படையில் படம் பெரிய  மைனஸ்.
 
சாருலதா 
 
 
(+)
 
* ப்ரியாமணியின் வித்தியாசமான நடிப்பு. உண்மையிலேயே இருவேறு நடிப்பை படம் முழுக்க காட்டப்படுள்ளது. ப்ரியாமணியின் உடல் மொழி இப்படத்தில் கட்சிதமாக அமைந்திருக்கிறது. ஒரு முகத்தில் காதலும் ஒரு முகத்தில் வெறுப்புமான நடிப்பு மனதை தொட்டது.
 
* ஒரு அமானுஷ படமாக எடுத்ததோடு அதில் கடைசியில் ஆவியாக வருவது லதா அல்ல சாரு என்பது ஒரு சரியான யுக்தி. லதா சாருவாக ஆள்மாறாட்டம் செய்து இறுதியாக மரணம் வரை சென்று தன் காதலனோடு சேருவது நன்றாக திரைகதை அமைக்கப்பட்டிருக்கிறது 
 
*படத்தில் காமடிக்காக வரும்  சிறுவன் வயதிற்கு மீறி பேசினாலும் ரசிக்கும்படியாகவே  
உள்ளது.

(-)

* படத்தில் மனநல மருத்துவராக வரும் சீதாவின் நடிப்புக்கு இன்னும்  கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

* சாரு நல்லவள் என்று காடப்படாலும் தன் தாயையே  பழிவாங்க நினைப்பதாய் வரும் காட்சிகள் தேவையற்றது .

* படத்தில் சில இடங்களில் தேவையற்ற கிராபிக்ஸ் கட்சிகள் தவிர்த்திருக்கலாம். 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக