பூஜா தனது அப்பா சுவாமிநாதன் டைரியைப் படித்து, அவரது ரகசியங்களை தெரிந்து கொண்டபின் பூஜாவால் கல்லூரியில் சரியாக பாடங்களை கவனிக்க முடியவில்லை. ஒரு பக்கம்
அர்ஜுன் மீது காதல். இன்னொரு பக்கம் அப்பாவின் ரசியங்கள் என அவளை காயப்படுத்திக் கொண்டே
இருந்தது. பூஜா கல்லூரி முடிந்ததும் பேராசிரியை பவித்ரா வீடிட்குச் சென்றாள். அப்போது பேராசிரியை பவித்ரா வீட்டில் இல்லை பூஜா கதவைத் தட்டினாள். அப்போது சித்ரா உள்ளிருந்து வந்து கதவைத் திறந்தாள்.
இது பேராசிரியை பவித்ரா வீடுதானே? என்று சித்ராவிடம் பூஜா கேட்டாள்.
ஆமாம்! நான் அவங்க பெண் பேர் சித்ரா. நீங்க பூஜாதானே.
ஆமாம்! என்று தலையை அசைத்தாள் பூஜா.
உங்களைப்பற்றி அம்மா நிறைய சொல்லி இருக்காங்க. உள்ளே வாங்க என்று பூஜாவை வீட்டின் உள்ளே அழைத்து உபசரித்தாள் சித்ரா.
பூஜா சித்ராவைப் பார்த்ததும் மனசு சற்று நிதானமானது. இறுக்கமான முகம் சற்று தளர்ந்தது.
என்ன சாப்பிடரீங்க? காப்பி? டீ?
கொஞ்சம் டீ மட்டும் போதும் என்று சித்ராவின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு சித்ராவுடன்
பேச்சைத் தொடர்ந்தாள். சித்ராவை பற்றியும் அவளது குடும்ப பின்னனி பற்றியும் பூஜா சித்ராவிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். கொஞ்ச நேரம் பேசியிருந்தாலும் பூஜாவும், சித்ராவும் ஒரு மென்மையான நட்பை
தங்களுக்குள் உணர்ந்தனர். அப்போது பேராசிரியை பவித்ரா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்துவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தார்.
வா பூஜா ரொம்ப நாளா உன்னை வீட்டிக்கு கூப்பிட்டு வரணும்னு நினைத்திருந்தேன் ரொம்ப ஆச்சரியமா இருக்கு நீயே வந்துட்டே. சித்ரா கிட்ட உன்னை பற்றிதான் அடிக்கடி பேசுவேன்.
ஆமாம்! ஆமாம்! உங்களை தவிர வேற எதையும் அம்மா பேசறதே இல்லை என்று சித்ரா தன் அம்மாவை கேலி செய்தாள்.
உங்க அப்பா எப்படி இருக்காரு? என்று பேராசிரியை பவித்ரா பூஜாவின் அப்பா பற்றி ஒன்றுமே தெரியாதது போல் கேட்டாலும் அவரது கண்களில் உள்ள எதிர்பார்ப்பை பூஜா உணராமல் இல்லை. பூஜா அங்குள்ள ஒவ்வரு பொருளையும் கூர்ந்து கவனித்தபடியே அப்பா நன்றாக இருப்பதாக கூரினாள். பூஜாவிடம் இருந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்ததாய் அவள் உள் மனம் அறிவுறுத்தியது. பூஜா தன் மனம் சற்று லேசாவதை உணர்ந்தாள்.
பூஜா, பேராசிரியை பவித்ரா மற்றும் சித்ராவின் உரையாடல் அவர்களுக்குள் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இறுக்கமான சூழ்நிலையோடு வந்த பூஜா முகத்தில் சிரிப்போடு இருவரிடமும் விடைபெற்று வீடு திரும்பினாள்.
( தொடரும்...)





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக