ஒரு ஆணுக்கு அழகு என்பது அவனது கம்பீரம், ஒரு பெண்ணிற்கு அழகு அவளது முகத்தில் காட்டும் கவர்ச்சிப்புன்னகை. இவை இரண்டையும் அவரவர்கள் இழந்துவிட்டால் அழகு அவர்களை விட்டு அகன்றுவிட்டதாக அர்த்தாம். ஜான் தனது தொழில் நஷ்டத்தால் எல்லவற்றையும் இழந்து தான் குடும்பத்திற்கு கொடுக்கவேண்டிய அடிப்படை வசதிகளைக்கூட கொடுக்கமுடியாமல் தனது கம்பீரத்தை இழந்து அழகற்று காணப்பட்டார்.அதே போல் யாரோ முன்பின் தெரியாத ஒரு நடிகையின் வீட்டில் தன்னையும் தனது குடும்பததையும் அடகுவைதிருப்பதாக நினைத்து நினைத்து தனது கவர்ச்சிப்புன்னகையை இழந்து மேரியும் தனது வசமுள்ள அழகை இழந்து காணப்பட்டார். எப்போது கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சங்கடம் வருமோ அப்போது சந்தேகம் வந்துவிட்டதாக அர்த்தம்.
மேரி கீழே வராமல் மடியிலேயே இருப்பதை பார்த்து மெல்ல ரிப்சி, மேரியின் அறைக்கு சென்று அவரிடம் பேசினார்.
ஹலோ மேரி! ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க ஒடம்பு சரியில்லையா? என்று கேட்டார் ரிப்சி.
கொஞ்சம் தலைவலி என்று தனது நெற்றியை தேய்த்துக்கொண்டே பதிலளித்தார் மேரி.
நான்கொஞ்சம் மருந்து கொடுக்கட்டுமா?
இல்லை வேண்டாம் இப்போது பரவாயில்லை.
ரிப்சி அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அந்த அறையின் முற்றதில் இருந்த தனது ஆல்பத்தை எடுத்து மேரிக்கு கட்டினார். அதை கொஞ்சமும் விரும்பாத மேரி வேண்டாவெறுப்பாக பார்த்தார். மேரிக்கு தன்னை கொஞ்சமும் பிடிக்கவில்லை என்று ரிப்சிக்கு புரிந்தது. மேரி ஏதோ ஒரு காரணத்தினால் தன்னை வெறுக்கிறார் என்பதை புரிந்துகொண்டு மேரியிடம் விடை பெற்று சமையலறைக்கு வந்தார் ரிப்சி.
ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தாலே யார் பெரியவர் என்ற ஆதிக்க சண்டை வரும். அதுவும் சமவயது உள்ள இரண்டு பெண்கள் என்றால் அங்கு நடக்கும் உரிமை சண்டையை பற்றி சொல்லவே வேண்டாம். இரண்டு பெண்களும் கிட்டதட்ட சமபலத்தில் உள்ளனர். ரிப்சிக்கு நல்ல குடும்பமில்லை ஆனால் நிறைய வசதிகள் உண்டு. மேரிக்கு நல்ல குடும்பம் ஆனால் வசதியில்லை. இருவருமே அழகானவர்கள், அறிவாளிகள் இவை போதாதா மனக்கசப்பு வருவதற்கு. ஜானுக்கும் அவரது குடும்பத்திற்கும் அடைகலமளிததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று மேரிக்கு புரியவைக்கவேண்டும் என்ற கவலை ரிப்சிக்கு. தனது கணவன் ஜான், ரிப்சியின் வலையில் விழுந்துவிடாமல் பாதுகாக்கவேண்டும் என்ற கவலை மேரிக்கு.
( தொடரும்...)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக