" WAR HORSE" என்னும் ஆங்கிலப்படம் ஆஸ்கார் அவார்ட் பெற தகுதி பெறாமல் போனது கொஞ்சம் வருத்தமளிக்கிறது. இந்த படம் ஒரு சிறந்த படம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த படம் ஒரு குதிரையை மையமாக வைத்து எடுக்கப்பட படம் என்பது படத்தின் தலைப்பே நமக்கு சொல்லிவிடுகிறது. ஒரு குதிரை மனிதனுக்கு எவ்வாறு அடிமையானது? என்று யோசித்தால் மனிதன் எந்த எந்த விலங்குகள் சாதுவோ அந்த விலங்குகளை அடிமையாகினான். எது அடங்கவில்லையோ அந்த விலங்கை கொன்று மனிதன் மிருகமாகினான். அப்படி மனித இனத்துக்கு அடிமையான விலங்குதான் இந்த குதிரை இனம். ஒரு குதிரைக்கு இருக்கும் சக்தியானது மனிதனுக்கு கண்டிப்பாக இல்லை. ஆனால் மனிதனுக்கு இருக்கும் கேவலமான புத்தி குதிரைக்கு இல்லை அதனால்தான் உடல்வலிமை மிக்க குதிரை அந்த குதிரையைவிட வலிமை குன்றிய மனிதனுக்கு சேவை செய்கிறது. அந்த சேவையை உயர்ந்ததாக கருதாது அந்த குதிரை நடக்க முடியவில்லை என்றவுடன் அதை கொல்லும் கொடூரம் மனிதனிடம்தான் உள்ளது.

ஒரு சின்ன குதிரையை பார்த்து அதனை நட்பாக்கிகொள்ள ஆசைபடுகிறான் நாயகன். நாயகனின் அப்பா அந்த குதிரையை அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கிறார். அதை பொறுக்காத நாயகனின் தாய் கடிந்து கொள்கிறார்.நாயகன் தான் ஆசைப்பட குதிரை தன் முன்னே நிற்பதை நினைத்து பெருமை கொள்கிறான். குதிரையை தனக்கு நட்பாக்கிக்கொண்டு அதற்கு பயிற்சியளிக்கிறான் நாயகன்.

குதிரையை நாயகனின் தந்தை காசிற்காக ராணுவத்திற்கு குதிரையை விற்றுவிடுகிறார். அதை சற்றும் விரும்பாத நாயகன் அந்த குதிரையை தன்னிடம் தந்துவிடும்படி அந்த ராணுவ அதிகாரியிடம் கேட்கிறான். ஆனால் அந்த குதிரை அவனுக்கு கொடுக்கப்படவில்லை.

அந்த குதிரை ஒவ்வருவராக கைமாறுகிறது. யாரிடம் சென்றாலும் அந்த குதிரை தனது விசுவாசத்தை சரியாக காட்டி வேலை செய்கிறது. அதனாலேயே அந்தக்குதிரையின் மதிப்பு கூடுகிறது. அந்த குதிரை ஒரு சின்ன பெண்ணிடம் அடைக்கலமாகிறது. அந்த பெண் அதை தனக்கு ஒரு நல்ல நண்பனாக நினைக்கிறாள். ஆனால் அதற்குள் ராணுவம் அந்த குதிரையை மீட்டுவிடுகிறது.

போர்களத்தில் அந்த குதிரை சண்டையிடும்போது அங்கு நடக்கும் கொலைவெறி தாக்குதல் சகிக்க முடியாமலும் தனக்கு துணையாக இருந்த மற்றொரு குதிரை மரணமடைந்ததை பொறுக்க முடியாமலும் போர்களத்தில் தலைதெறிக்க ஓடுகிறது. நாயகன் அந்த குதிரையை அடைய ராணுவத்தில் சேர்ந்து சண்டையிடுகிறான். அப்போது குதிரை வேகமாக ஓடி கம்பி வேலிக்குள் சிக்கிவிடுகிறது. அதை மீட்க இரு படையினரும் சண்டையை நிறுத்திவிட்டு அதற்கு முதல் உதவி செய்கிறார்கள்.

குதிரை யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு ஒரு டாஸ் போட்டு முடிவு செய்கிறார்கள். குதிரை நாயகன் இருக்கும் ராணுவ கூடரத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அப்போது நாயகன் கண்களில் அடிபட்டு கண்களில் கட்டுபோட்டிருக்கும்போது அந்த குதிரை பயன்படாது என்று கூரி அதை கொல்ல நினைக்கும்போது நாயகனின் ஓசை கேட்டு திரும்பிப்பார்கிறது. குதிரை தன்னுடையது என்று அதன் அடையாளத்தை பார்க்காமலேயே சொல்கிறான் நாயகன். அதை உறுதி செய்து அந்த குதிரையை கொல்லாமல் விடுகின்றனர் ராணுவத்தினர்.மீண்டும் அந்த குதிரை அவனை அடைந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் முடிவு. ஒரு குதிரையை அழகாக நடிக்கவைததட்கு பாராட்டுக்கள். படம் பார்க்காதவர்கள் கண்டிப்பாய் பார்த்து ரசிக்கும்படி உள்ளது என்ற உத்தரவாதத்தோடு முடிக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக