தமிழ் படம் பார்த்து அலுத்து போனவர்களுக்கு " Cast away" என்ற ஆங்கில படத்தை அறிமுகபடுத்த விரும்புகிறேன்.நான் Tom Hanks தீவிர ரசிகன்.
Tom Hanks ஒரு நல்ல நடிகர் என்றோ இவ்வளவு அருமையாக நடிப்பார் என்றோ எனக்கு தெரியாது Cast away படம் பார்க்கும் வரை.
படம் தொடங்கும் போது டோம் ஹான்க்ஸ் நல்ல நடுத்தர உடம்பு மற்றும் அழகான தோற்றத்துடன்
இருக்கும் ஒரு பணக்கார முதலாளி.
தனது தொழில் விசயமாக தான் காதல் மனைவியிடம் விடைபெற்று விமானத்தில் பயணிக்கிறார் .
விமானத்தில் கோளாறு நடு வானில் தத்தளிகிறது. விமானம் நடு கடலில் விழுகிறது. இவருடன் பயணித்த எல்லோரும் இறக்கிறார்கள்.Tom Hanks மட்டும் உயிர் பிழைக்கிறார். ஒரு தீவை அடைகிறார். அந்த தீவில் யாருமே இல்லை. இவர் ஒருவர் மட்டுமே.
பேச்சு துணை இல்லை. சாப்பிட உணவு இல்லை. குடிக்க தண்ணிர் இல்லை. தீவை சுற்றிலும் கடல் மட்டுமே. விமானத்தில் இருந்து கறை ஒதுங்கிய பார்சல் எல்லாம் பிரித்து பார்கிறார் அதில் ஒரு பந்து கிடைகிறது. அதை தனது ரத்தத்தால் முகம் வரைத்து அதனுடன் பேசுகிறார், கோபபடுகிறார்.
பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லை நான்கு வருடம் அந்த தீவில் தனி ஆளாக வாழகிறார். பிறகு ஒரு கட்டுமரத்தை உருவாக்கி கடலில் பயணிக்கிறார் தனி மனிதனாக.
பல போரட்ட பயண முடிவில் ஒரு பெரிய கப்பல் வருகிறது அவரை அவருடைய வீட்டில் சேர்கிறார்கள். அவரது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தார். Tom hanks நான்கு வருடம் பின்பு உயிருடன் வந்ததை அவராள் நம்ப முடியவில்லை.
எல்லோருக்கு பார்டி கொடுக்கிறார் அவரது முன்னால் மனைவி உள்பட. பார்டி முடிந்து மீதமாகிய உணவை பார்க்கும் போது அவருடைய கண்களில் வெறுமை மட்டுமே தெரிகிறது. கடைசி காட்சி தன்னுடைய பாதை எதுவென்று தெரியாமல் தனது மனைவிக்கு விடைகொடுத்து விட்டு நான்கு சாலைகள் நடுவே தயங்கி நிற்கும்போது படம் நம் மனதில் நிற்கிறது. இந்த படம் பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் ப்ளீஸ்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக