அனைவர்க்கும் வணக்கம்,
நாட்டில் நடக்கும் ஊழல் பற்றிய விளிபுணர்வுக்காகவும் அன்னா ஹசாரே அவர்களின்
உண்மையான உண்ணாவிரதம் என்னை யோசிக்க வைத்தது. கொஞ்சம் வாங்கினால் லஞ்சம் அதிகம் வாங்கினால் ஊழல். உண்மையில் நாடு இலவசம்,ஊழல் என்று நாசமாகி போய் கொண்டிருகிறது. அன்னா ஹசாரே போல் உண்மையான சிலர் செய்யும் தியாகம் மதிக்க படவேண்டும்.
" நாட்டை நாசமாக்கும்...
ஊழல் நச்சுபாம்புகளை
நசுக்க வேண்டும்!
நாட்டை வளப்படுத்த...
லஞ்சம் வாங்கும் பழக்கத்தை
ஒழிக்க வேண்டும்!"
இதை வலியுறுத்தும் விதமாக கோவை வ.உ.சி மைதானத்தில் (08 / 04 / 2011 ) அன்று மாலை 6 .45 மணிக்கு மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி ஊழலுக்கு முற்றுபுள்ளி வைக்க உறுதி மேற்கொண்டனர்.
ஊழலை ஒழிக்க முடியாத ஒன்றுமில்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒன்று படுவோம் ஊழலை ஒழிப்போம். அடுத்த தலைமுறை அமைதியாக வாழ வகை செய்வோம்.
ஜெய்ஹிந்த்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக