" Journey 2" படம் வந்திருப்பதை பார்க்க ஆவலாய் படம் பார்க்க சென்றேன். ஒரு 3 D படம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அழகாக எடுக்கப்பட்ட படம் Journey 2. ராக் இதுவரை நடித்த படங்களில் அவரது வியக்கவைக்கும் சண்டை காட்சி பார்க்க முடிந்த எனக்கு அவரது அழகான நடிப்பு திறமையை பார்க்க முடிந்தது இந்த படத்தில்தான் . ஒரு தீவு அந்த தீவை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சி படம் என்று படம் ஆரம்பம் முதல் முடிவு வரை போகும் வேகம் மிக ரசனைக்குரியது. ஒரு தீவை இவ்வளவு அழகாக அவதார் படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் பார்க்க முடிந்தது. படம் மிக பிரம்மாண்டமான விஸ்வல் எபக்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரு தேர்ந்த நடிப்பை ராக்கின் நடிப்பில் பார்க்க முடிந்தது. ஒரு தீவை கண்டுபிடிக்கும் முயற்சி அந்த தீவில் சிறிய விலங்குகள் பெரிதாகவும் பெரிய விலங்குகள் சிறியதாகவும் இருக்கிறது என்ற வித்யாசமே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது . ஒரு காட்சியை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் " Journey 2" படக்குழுவினர்.
புதிய புதிய விலங்குகளை நமக்கு பிரம்மாண்டமாக அறிமுகப்படுதுவதாகட்டும். அந்த விலங்குகளிடம் தப்பிபதாகடும் கண்முன் நாமே அந்த படத்தை நடித்ததை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதம் தான் படத்தின் வெற்றி என்பேன். படத்தின் கதாநாயகி ஒரு அழகான நடிப்போடு பார்க்கவும் அழகாக இருக்கிறார். அதுசரி அழகாக இருந்தால்தானே அவள் கதாநாயகி. அழகோடு சேர்ந்து ஒரு அழகான நடிப்பு இருந்துவிட்டால் படம் கண்டிப்பாக அந்த கதாநாயகிகாகவே ஓடும் என்பதில் ஐயமில்லை.
படம் முழுக்க கதாநாயகிக்கு ஒரே ஒரு காஸ்டும் தான். அந்த சிவப்பு நிற உடையில் மனதை மயக்குவது அழகின் சிகரத்தை தொட்ட மாதிரி ஒரு பிரம்மிப்பு. படத்தின் கதாநாயகி தென்படும் முதல் காட்சியில் கதாநாயகன் மட்டும் பார்த்து வியப்படைவதில்லை படம் பார்க்கும் அனைவரும் வியப்படைவதை தவிர்க்க இயலாத ஒன்று.
படத்தில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உள்ள மெல்லிய காதல் வானுயர பருந்துகளோடு சண்டையிட்டு கதாநாயகியின் உயிரை காப்பாற்றி காதலை அடைவது மனதை மார்கழி குளிர் போல் நனையச் செய்கிறது. இந்த படம் குழந்தைகளுக்கு ஏற்ற படம். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று அனைவருக்கும் ஏற்ற ஒரு அழகான பொழுதுபோக்கு படம் இந்த Journey 2 படம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக