காதல் வாழ்க்கை பயணத்தில் ஒரு இனிமையான அனுபவம். காதலை ரசிக்காமல், உணராமல் யாராலும் வாழ்கையை ரசிக்கவோம் அனுபவிக்கவோ முடியாது. காதல் மனதை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் ஒரு உணர்வு. காதல் எப்படி ஒவ்வரு காலகட்டதிலும் உருமாறியது. காதல் என்பதன் பொருள் என்ன? என்று பார்த்தால். கா + தல் என்று பிரித்தால் "கா"என்றால் உலகம் "தல்" என்றால் இயக்கம் என்று எடுத்துக்கொண்டால் உலகத்தின் இயக்கம் காதல். ஒவ்வரு ஆசைகளும் காதலை அடிப்படையாக கொண்டவைதான். சிறு வயதில் பொம்மை மீது காதல். வயது கூடக்குட காதல் என்பது மாறிக்கொண்டே இருக்கும்.காதல் உலக பரிணாம வளர்ச்சியின் துவக்கம். காதல் என்பது பருவ வயதில் மட்டும் வருவதில்லை, பிறந்தது முதலே காதல் என்பது இருந்துகொண்டே இருக்கிறது. அப்படி காதல் உணர்வற்றவர்கள்தான் மற்ற உயிரை இம்சிக்கிறார்கள். இறையன்பும் காதல்தான், இறைவம் மீது மீரா வைத்த காதல்தான் மீராவை இறைவியாக்கியது .ஒவ்வரு உயிர்கள் மீதும் கொண்ட காதலால்தான் சாதாரண மனிதனை "மகாத்மா" என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியது. ஒரு பெண்மீது கொண்ட காதல் என்பது அவளை தாயாக, தோழியாக, சகோதரியாக பார்க்கவைக்கிறது. அப்படி பார்க்காதபோதுதான் ஒரு பெண்ணை கெட்ட எண்ணத்தில் நாடுகிறது. காதல் என்பது ஒரு உணர்வு அது பருவவயதை அடைந்த ஆணும், பெண்ணும் கொண்ட ஒரு அணுகுமுறைக்கு மட்டுமே அதை பயன்படுத்துவது அபத்தமானது, சில நேரம் ஆபத்தானதும்கூட. காதல் ஒரு ஆண் பெண்ணோடு கொண்ட ஈர்ப்புக்குகாண சம்பந்தம் மட்டுமல்ல உலக இயக்கத்துக்கான சம்பந்தம் அது.
ஒரு மனிதனின் முக்கிய உறுப்பாக இதயம்தான் பிரதிபலிக்கிறது. அத்தகைய இதயத்தை காதலின் அடையாளச்சின்னமாக ஆக்கியிருக்கிறார்கள். காதல் மனதின் தேவை என்பதுதான் இதன் கருத்து. மனிதனின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய பங்கு இந்த காதலுக்கு உண்டு. மனிதன் ஆதிகாலத்தில் இருந்து இப்போதுவரைக்கும் அவன் முக்கிய தேவையாக ஒரு பெண்ணை அடைவதிலேயே குறியாக இருக்கிறான் அவன் தனது என்று கூரிக்கொள்ள ஒரு சந்ததியை உருவாகவே அந்த பெண்ணை அடைய, அவளை கவர என்று ஆரம்பித்ததே உலகத்தின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணம் அதனால் ஏற்பட்டது தான் இத்தனை காலநிலை மாற்றம். ஒரு பெண்ணை அடைய எடுத்த முயற்சி காலம் முழுவதும் அவள் தன்னை ரசிக்கவேண்டும் என்ற இடைவிடாத ஆசைகளும், ஏக்கங்களும்தான் இந்த உலகின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் அதுவே இப்போது உலகத்தின் அழிவுக்கு காரணம் என்பது வேறு விஷயம்.
இந்த காதல் ஒட்டுமொத்த உலக வளர்ச்சியின் ஒரு உதாரணம். வரப்போகும் காதலர் தினத்தன்று ஒரு பூவை கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வரு அழகான பெண் பின்னாடியும் சென்று அலைவதில் அல்ல காதல் என்பது. காதல் உடல் தேவை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல அது மனமும் சம்பந்தப்பட்டது. ஆகையால் அழகோடு சேர்ந்த குணங்களும் ஒரு ஆண் பார்க்கவேண்டிய முக்கிய அம்சம் காதலில். ஒரு பெண் பார்க்கவேண்டிய விசயமாக காதலில் இருப்பது அவன் நல்லவனா? கடைசிவரை தன்னை காப்பவனா? என்று அத்தோடு அவன் அல்ப ஆண்? அல்பா ஆண்? என்பது . பெண் எப்போதும் அல்ப ஆண்களைவிட அல்பா ஆண்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். எப்போது அல்ப ஆண்களுக்கும், அல்பா ஆண்களுக்கும்தான் போட்டி. அல்பா ஆண்கள் தங்கள் திறமையால் மற்ற பெண்களை கவருவான். ஆனால் அல்ப ஆண்களோ தங்கள் திறமையை நம்பாமல் அரசியலை கையாள்வார்கள் அவர்கள் குறுக்கு புத்திக்காரர்கள்.அல்பா ஆண்கள் போல் அல்ப ஆண்களும் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு அதை கொண்டு பெண்ணை அடைந்தார்களனால் அவர்களும் அல்பா ஆண்கள்தான்.
என்னை பொறுத்தவரை திருமனதிட்கு முன்பு எல்லா பெண்களும் ஆண்களை ஒரு அடி தொலைவில் நின்று பேசுவது நல்லது. அப்போதுள்ள பெண்களுக்கு அல்ப ஆண் யார்? அல்பா ஆண் யார்? என்பது தெரிந்திருந்தது ஆனால் அவர்களுக்கான சுதந்திரம் இல்லாத காரணத்தினால் அல்ப ஆண்களை திருமணம் செய்துகொண்டு அல்பா ஆண்களை பற்றி கனவு கண்டே வாழ்ந்து முடித்தார்கள். இப்போது பெண்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது ஆனால் அவர்களுக்கு கிடைத்த சுதந்திரத்தின் வலிமை தெரியாமால் அல்பா ஆண்களை தேர்வு செய்வதை மறந்து அல்ப ஆண்களிடம் சிக்கி வாழ்கையை தொலைத்துவிடுகிறார்கள். காதல் என்பது எந்த காலத்திலும் ஒன்றுதான். ஒரு பெண் அல்லது ஒரு ஆண் எப்படிப்பட்ட துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பொருத்து அவர்களது வாழ்க்கை அல்பமானதா, அபாரமானதா என்பது முடிவுக்கு வரும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக