செவ்வாய், டிசம்பர் 06, 2011

டாப்- 10 அரசியல் பிரச்சனைகள் (அரசியல் விமர்சனம்)...


பல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்போது அதில் எது சிறந்தது என்ற விமர்சனம் செய்வதை டாப் 
10  மூவீ ஸ் என்று அழைப்பது  போல் இப்போது டாப் 10  அரசியல் பிரச்சனைகளை ஆராய்வோம். அதில் எது மக்கள் மத்தியில் கடும் சீற்றமாக உருவெடுத்து உள்ளது என்பதை இப்போது காண்போம். "DAM 999" என்ற ஒரு படத்தை எடுத்து அது தமிழர்க்கும், கேரள மக்களுக்கும் கடும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது இந்த விமர்சனத்தை பிறகு ஆராய்வோம். இப்போது அந்த படத்தில் உள்ள ஒரு புகைப்படம் உங்களுக்காக. டாப் 10 பிரச்சனைகளில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது "DAM 999"  என்ற சர்ச்சைக்குரிய படம்.  




முல்லை பெரியார் அணை விவகாரம் ஒம்பதாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பிரச்சனை புதுவரவு என்பதால் இதன் தீவிரம் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம். இதோ முல்லை பெரியார் பிரச்சனை பற்றிய விமர்சனம்.
முல்லை பெரியார் அணை உடைந்தால் மக்கள் பலரது உயிருக்கு ஆபத்து என்று வாதாடிய கேரள அரசு அந்த அணையை தானே உடைக்க முன்வந்தது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை குறிக்கிறது. ஒருவர் வாழ ஒட்டுமொத்த சமுகத்தை வளைப்பதா? ஒருவன் உண்ண ஊரை தீக்கு இரையாக்குவாதா? மனிதன் மற்ற விலங்குகளை அழித்து அதை உணவாக உட்கொண்டான். இப்போது 
அவன் வெறி மனிதர்களிடமே திரும்பிவிட்டதா?  ஒரு கிலோமீட்டர் இடைவெளி உள்ள ஒரு எல்லையில் மனிதன் பூமியை, தண்ணிரை பிரிப்பதா? வானம் நமக்கு தூரம்,  இல்லையேல் வானத்தை வெட்டி எல்லை வகுத்திருப்பான் மனிதன். ஒவ்வரு சராசரி  மனிதனுக்கும் ஆயுள் என்பது  அறுபது ஆண்டுகள் என்று வைத்துகொண்டாலும்  இதில் யார் எதை தூக்கி மடியில் கட்டிக்கொண்டு போகப்போகிரார்களோ 
தெரியவில்லை?  இது ஐயப்பா உனக்கே வெளிச்சம். உன்னை தேடி போகும் கூட்டம் ஒருபுறம். தண்ணீரை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மனிதர்கள் மறுபுறம். நீ என்ன செய்வாய் பாவம். இதுவே இந்நாட்டின் சாபம்  என்று  மக்களின் புலம்பல் காதுகளை வலிக்கச் செய்கிறது.  


நீண்ட நாட்களாக உள்ள
 கூடன்குளம் அணுமின் நிலையம் பிரச்சனை மற்ற பிரச்சனைகளால் சற்று சப்தம் குறைத்து உள்ளது. மக்கள்  ஒருபுறம் இந்த அணுமின் நிலையத்தை எதிர்க்க அணுமின்  நிலையத்துக்கு பதிமூன்றாயிரம் கோடி செலவு செய்த மத்திய அரசு ஒருபுறம், மத்திய அரசுக்கு தண்ணி காட்ட நினைக்கும் மாநில அரசு மறுபுறம் என்று  பிரச்சனைகள் தீர்கப்படாமலேயே போய் கொண்டிருக்கிறது. அணுமின் நிலையம் பிரச்சனை இந்த வாரம் ஆறாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்திற்கு பின்தங்கி உள்ளது. 



ஹர்விந்தர் சிங் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை அரைந்த விவகாரம் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது. ஹர்விந்தர் சிங் இப்போது மனநல காப்பகத்திற்கு அனுப்பபடுள்ளர் என்கின்ற செய்தி மக்கள் மத்தியில்  சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  ஒரு இளைஞன் அரசியல்வாதி செய்த தப்பிற்கு அவரை தண்டிக்க நினைத்தது தவறு என்று மத்திய அரசின் முடிவாக உள்ளது.
மேற்கொண்டு இந்த பிரச்சனை எவ்வளவு தூரம் மக்கள் ஆதரவு பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

  

 கனிமொழி சிறையில் இருந்து சென்னை வந்தது பெரிய விசயமில்லை என்றாலும் அவர் ஏதோ நாடிட்காக தியாகம் செய்துவிட்டு வந்ததை போல் திமுக கொண்டாடியது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  கனிமொழியின் சிறை வாழ்க்கை முற்று பெற்றதா? இல்லையா? என்பதை 
வரும் நாட்களை காண்போம். இப்போது இந்த பிரச்சனை ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. 




 முதல் அமைச்சர் அவர்கள் மீது போடப்பட்ட சொத்து குவிப்பு விவகாரத்தில் ஜெயலிதா அவர்களது
ஆளுமை கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதிலில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
அவர் மீது போடப்பட்ட வழக்கு எப்படிபட்ட மாற்றங்கள் வரும் என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம். இப்போது இந்த பிரச்சனை ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வழக்கு  பல முறை வாய்தா பெற்று விட்டதால் இந்த பிரச்சனை பற்றி அதிக விமர்சனம் தேவை இல்லை என்ற காரணத்தினால் அடுத்த பிரச்சனையாகிய விலைவாசி உயர்வு பிரச்சனையை விமர்சிப்போம்.



 மக்களின் அன்றாட வாழ்கையில் மேலும் சுமை ஏற்றிவிட்டதாக எதிர்கட்சிகள் போர் கோடி தூக்கும் சமயத்தில் முல்லை பெரியார் அணை பிரச்சனை வந்து விட்டதால். இதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். உள்ளூர் விவகாரம் எப்போதும் இருக்கும் அதை பிறகு பார்த்துகொள்ளலாம் .ஆனால் வெளியூர் விவகாரம் எப்போதாவது வரும் என்பதால்  கட்சிகள் ஒன்று சேர்த்து போராட வேண்டிய நிலைமை வந்துவிட்டது, வேறு வழியின்றி இந்த பிரச்சனையை பாக்கி வைத்து விட்டு முல்லை பெரியார் விவகாரத்தில் தலை காட்ட தொடங்கிவிட்டனர். என்றாலும் தாங்க முடியாத சுமை மக்களை வாட்டி வதைக்கிறது என்பதால் இந்த பிரச்சனை நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது.


                  இதுவரை பெரிய அளவில் கல்லூரி மாணவர்களை பாதிக்காமல் போய் கொண்டிருந்த அரசியல் பிரச்சனைகள் இப்போது மத்திய அமைச்சர் கபில் சிபில்
facebook போன்ற  சமூக இணையதலத்தை  தடை செய்வது பற்றி பேசியது மாணவர்கள்    மத்தியில் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. இது மாணவர்களின் எதிர்ப்பு என்பதால் இரண்டு இடங்கள்  முன்னேறி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.


ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே அவர்கள் நடத்திய போராட்டம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிரதால் இந்த வாரமும் அதே இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது  அவரது போராட்டம் மக்களை ஊழலுக்கு எதிராக பேச வைத்திருக்கிறது. இந்த பிரச்னையை மத்திய அரசு எப்படியெல்லாமோ  சமாளித்து வருகிறது. இதை பற்றிய விமர்சனங்கள் நிறைய பார்த்து விட்டதால் அடுத்த முதல் இடத்தை பிடித்த பிரச்னையை  பார்ப்போம்.



         காங்கிரஸ் தவிர மற்ற அணைத்து கட்சிகளும், மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்தது ஊழலுக்கு அடுத்தபடியாக மத்திய அரசு அறிவித்த
51 % வால் மார்ட் நிறுவனத்தின் இந்திய முதலீடு. காங்கிரஸ் மக்களை திசை திருப்ப எடுக்கும் முயற்சிகள் அவர்களையே பதம் பார்க்கிறது என்பதை உணராமல் மக்களுக்கு  வேடிக்கை காட்டும் போக்கு மக்களின் சீற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது. போராட்டம் வலு பெற்றதும் அரசு பின்வாங்கியதோடு  இந்தவாரம் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.  இனி வரும் நாட்களில் மக்களுக்கு எந்தெந்த வகையில் பிரச்னையை உண்டாக்கலாம் என்று நினைப்பதை விட்டுவிட்டு நல்ல முறையில் எப்படி பணவீக்கத்தை சமாளிப்பது என்பதை மத்திய அரசு
சிந்தித்து செயல்பட்டால் நல்ல பெயர் வாங்க முடியாவிட்டாலும் கெட்ட பெயர் வாங்குவதை தவிர்க்கலாம். அடுத்தவாரம் எந்தெந்த பிரச்சனைகள் எந்தெந்த இடத்தை பிடித்திருக்கிறது என்பதை அடுத்தவாரம் பார்க்கலாம் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம் நன்றி வணக்கம்.



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக