ரிப்சி பக்கத்தில் சென்று பார்த்தபோது முப்பது வயது இருக்கும் ஒரு ஆண் காரில் கண் மூடியபடி இருந்தார்.
உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே? என்று ரிப்சி கேட்டார்.
நான் நன்றாக இருகிறேன் என்றபடி காரை விட்டு இறங்கி வந்தார் ஜான் பீட்டர்.
என் பெயர் ஜான் பீட்டர் இந்த விபத்திற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
என் பெயர் ரிப்சி உங்களுக்கு கொஞ்சம் காயம் ஆகியிருக்கிறது உள்ளே வாருங்கள் என்று ரிப்சி ஜான்னை வீட்டின் உள்ளே அழைத்து சென்று அவரது காயங்களுக்கு மருந்து வைத்து கட்டு போட்டார்.
நன்றி
எப்படி இந்த விபத்து நடந்தது?
என்னுடைய தவறுதான் ஏதோ சிந்தனையில் வண்டியை வேகமாக ஓட்டி வந்தேன் திருப்பத்தில் வரும்போது என் மனம் என்னுடைய பிரச்சனைகளை பற்றியே நினைத்து கொண்டு வந்ததால் நிலை தடுமாறிவிட்டேன். என் கவன குறைவுதான் இந்த விபத்திட்கு காரணம்.
என்ன உங்கள் பிரச்சனை? அதை என்னிடம் சொல்ல விருப்பபட்டால் சொல்லலாம்.
நான் என் வியாபாரத்தில் மிகப்பெரிய நஷ்டம் அடைந்துவிட்டேன். அதனால் என் வீடு இன்று ஏலத்தில் விடப்பட்டது. என் மனைவி மரியாவும், என் இரண்டு குழந்தைகளையும் ஒரு விடுதியில் தங்கவைத்துவிட்டு நான் என் நண்பனிடம் பண உதவி கேட்கச் சென்றேன். அவன் வெளியூர் சென்று விட்ட காரணத்தினால் வெறும் கையேடு திரும்பிவந்து கொண்டிருந்தேன் அதனால் நான் அடுத்ததாக என்ன செய்வது என்ற யோசனையில் வந்து இந்த விபத்தினை ஏற்படுத்திவிட்டேன்.
சரி வருத்தப்பட வேண்டாம் இன்று இரவு இங்கே தங்கிக்கொளுங்கள் நாளை காலை உங்கள் காரை சரி செய்து எடுத்து செல்லுங்கள் என்று கூரியபடியே ஜான்னை அவரது கணவர் அறையில் தங்கவைத்ததோடு அவரது கணவரது உடையை ஜான் அணிய தந்துவிட்டு ஜான் சாப்பிட உணவு தயார் செய்தார் ரிப்சி.
( தொடரும்...)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக