நாளை(12-12-2011) ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் என்பதால், நீயா? நானா? வில் தமிழகத்தில் ரஜினிகாந்த் என்ற மனிதர் எப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார் என்ற விவாதத்தைப் பார்த்தபோது. ரஜினிகாந்த் என்னை எப்படி கவர்ந்தார் என்பதை சொல்லவேண்டும் என்ற ஆசை என் மனதில் தோன்றியது. மனதிற்குள் என்னதான் ஒழித்துவைதாலும் ரஜினிகாந்த் பற்றிய பின்பம் என்னை தகர்த்து என்னைவிட்டு வெளியே வந்துகொண்டுதான் இருந்தது. அவரது படங்களையும்
அவரது உண்மையான வாழ்கையும் பொருத்திப்பார்த்தால். அவர் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த மனிதறும்கூட அவரைப் பற்றிய என்னுடைய அபிப்ராயம் உங்கள் முன்னால் வைக்கிறேன். ஒரு காரணமில்லாமல் ஒரு காரியமும் நடப்பதில்லை இந்த பூமியில். ஒரு பஸ் கண்டக்டராக வாழ்கையை துவங்கிய ரஜினிகாந்த் வானத்தை எட்டிப்பிடிக்கும்
அளவிற்கு வளர்ந்தபின்னும் இன்னும் ஆணவம், அகங்காரம் ஏதும் இல்லமால் இருக்கிறார் என்றால்
அவரைப் புகழ்வது தப்பே இல்லை.
ரஜினிகாந்த் அவர்களைப்பற்றி இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது "ரஜினிகாந்த் முதல் முதலில் என்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்ததும். முதலில் அவரது ஒல்லியான உருவமும், வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறையும், துடிப்பும் அவரை பார்த்தவுடன் எனக்கு தெரிந்தது. அவரது சின்ன கண்கள் பார்க்க மிக அழகாகவும், மற்றவர்களில் எளிதில் கவரும் வசீகரம் பெற்றிருந்தது. அப்போது நான் எடுத்துக்கொண்டிருந்த படம் முடிந்ததும் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அவரை அனுப்பிவைத்தேன். அடுத்து நான் எடுத்த படம் "அபூர்வராகங்கள்" அந்த படத்தில் ரஜினியை நடிக்கவைக்கலாம் என்று முடிவெடுத்தேன். அப்போது அவர் பெயர் "சிவாஜி ராவ்". அவர் வரும் முதல் காட்சி கமல் மாடியில் இருந்து சாவியை தூக்கி வீசி பிடித்துகொண்டிருப்பர் அப்போது சாவி கீலே விழுந்துவிடும். ரஜினி அப்போது கேட்டை
திறந்து கொண்டு உள்ளே வரவேண்டும். ரஜினி அந்த கேட் இரண்டையும் திறக்கும் பாணியை பார்த்து அவர் கண்டிப்பாக எதிர்காலத்தில் சிறந்த நடிகராக
வருவார் என்று என் மனம் சொல்லியது இன்று அதுவே நடந்தது" என்று ரஜினி பற்றி அவர் பேசிய சிறு பகுதி உங்கள் முன்னால் பதிவு செய்ய நினைத்தேன்.
ரஜினிகாந்த் அவருக்கே உரிய பாணியை மக்கள் மிகவும் ரசித்தனர் என்றாலும் அவர் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்த படம் ஆறிலிருந்து அறுபது வரை, தில்லு முள்ளு, மூன்று முடிச்சு, 16 வயதினிலே, தர்மதுரை, நல்லவனுக்கு நல்லவன், அவர்கள் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
அவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் நடித்துக்கொண்டிருந்த பலர் இப்போது காணமல் போய்விட்டாலும் இளைய நடிகர்களே நட்சத்திர அந்தஸ்து பெற முடியாமல் தோல்வியை தழுவும்போது இன்னும் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்ல அனைவரது நாடித்துடிப்பையும் அறிந்து இந்த வயதிலும் நடிக்கிறார் என்றால் அவரது உழைப்பை
கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்.
பொதுவாக சினிமா துறையில் எவ்வளவு பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்றாலும் தான் நினைத்ததை பேசிவிட முடியாது. ஆனால் யார்க்கும் பயப்படாமல் தான் என்ன செய்ய நினைத்தாரோ அதை செய்தார், பேசினார். அவரது பேச்சுக்கள் சிலநேரம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டது அவரது
குணத்தை காட்டுகிறதே தவிர தலைகனத்தை காட்டவில்லை. சமூக பிரச்சனைகளுக்கு
குரல் கொடுத்தார். தான் வணங்கும் இறைவனை எல்லோரும் அறிய " ஸ்ரீ ராகவேந்திரா" மற்றும் " பாபா" படத்தின் வழியாக நமக்கு பரிட்சயப்படவைத்தது அவரது ஆன்மபலம் என்று சொன்னால் அது மிகையாகது.
எம்.ஜி.ஆர் என்ற மூன்றேளுது மந்திரச்சொல் எப்படி மலேசியாவையும், சிங்கப்பூரையும் ஆக்ரமித்ததோ அதேபோல் ரஜினி என்ற மூன்றேழுத்து மந்திரச்சொல் ஜப்பானையும், இலங்கையும் ஆக்கிரமித்தது என்றால் ரஜினி சாதாரண மனிதராக நமக்கு தெரியவில்லை.
இதுவரை ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர் என்பதை பார்த்தோம். இப்போது அவரது நடிப்பின் துடிப்பைப் பார்ப்போம். எனக்கு தெரிந்து படங்களில் பஞ்ச் டையலாக் என்ற ஒரு
உக்தியை முதல் முதலில் கையாண்டது ரஜினிகாந்த் அவர்கள்தான் என்பது மறுக்க முடியாத
உண்மை. நெஞ்சை கொதிக்கவைக்கும் வீரவசனம் என்பது அரசியலில் மட்டுமே இருந்த நிலை மாறி சினாவுக்குள் பிரவேசிக்க வைத்த
பெருமைக்குரிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே. அவர் நினைத்திருந்தால் 1996 ஆம் ஆண்டே ஒரு கட்சியை ஆரம்பித்து நாட்டின் முதல்வராகி இருக்கலாம்.
ஆனால் அதை அவர் செய்யவில்லை. அதுவே அவரது புகழை விண்ணுயர வைத்த உச்சநிலை.
ரஜினி கருப்பின் அழகு. அவர் நிறம் கருப்பு ஆனால் மனசு வெள்ளை. அதனால் அவரால் யார்க்கும் எப்போதும் தொல்லையே இருந்ததில்லை. ஒருவரை புகழவேண்டும் என்று நினைத்தால் அப்போதே புகழ்ந்து விடவேண்டும். கொஞ்சம் தாமதித்தாலும் நமது ஈகோ நம்மை அதை செய்யவிடாது. ஆகையால் இன்று அவரை புகழவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிட்டது அதை தடுத்து கேரள அரசைப் போல் ஆணை கட்ட நான் ஆசைப்படவில்லை ஆகையால் இப்போதே அவரை எவ்வளவு புகழவேண்டுமோ அவ்வளவும் புகழ்ந்துவிடுகிறேன் அப்போதுதான் எனக்கு தூக்கம் வரும்.
நான் ரசித்த ரஜினி படங்கள் சொல்ல ஆரம்பித்தால் நாள்புறாவும் சொல்லலாம். ரஜினி படம் என்றால் எப்போது வரும் எப்போது வரும் என்று சிறுவயதில் ஏங்கிய காலம் உண்டு. பணக்காரன் படத்தை பார்க்க
அடம்பிடித்து பணம் வாங்கிச் சென்று ரசித்த நினைவுகளும்
எனக்குள் மறக்கமுடியாத நினைவுகளில் ஒன்று. படையப்பா படத்தை எத்தனை முறை
பார்த்தேன் என்ற கணக்கு கூட எனக்கு தெரியாது. ஆறிலிருந்து அறுபது வரை படம் மட்டும் நாம் நான்கு முறை பார்த்திருப்பேன் ரஜினியின் நடிப்புக்காக
மட்டும். இப்படி ரஜினி என்னை மயக்கிய தருணங்கள் நிறைய.
ஒரு உலக புகழ்பெற்ற நடிகரான ஜாக்கி சான் ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க ஆசைப்பட்டதை சொல்லவா? ஜப்பான்
மக்கள் முத்து படத்திற்கு அடிமையானதை சொல்லவா? இப்படி எதை சொல்ல அவரைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் சொல்ல இன்னும் மிச்சம் இருக்கும். ஆகையால் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக