இந்த உலகில் குடும்ப உறவுகள் அனைத்தும் நம்மோடு இருந்தால் மற்றவைகளை
பிறகு சம்பாதித்துக்கொள்ளலாம் ஆனால் எல்லாம் இருந்தும் குடும்ப உறவு இல்லாமல் தனித்து வாழ்வது என்றால் வாழ்க்கை வாழ்க்கையாக இருக்காது வெறுமையாகவே இருக்கும். அப்படிப்பட்ட வாழ்கையைதான் வாழ்த்து கொண்டிருக்கிறார் ரிப்சி. ரிப்சி அமெரிக்காவில் ஒரு பணக்கார பெண் மட்டுமல்ல
ஒரு புகழ்பெற்ற நடிகையும்கூட. இப்போது அவரது வயது நாற்பதை கடந்திருந்தது.
அவரது இளமைக் காலத்தில் அவரோடு இருந்த அனைவரும் அவரது அழகுக்காகவும்,
பணத்துக்காகவும், புகழுக்காகவும் இருந்தார்களே தவிர யாரும் அவரை புரிந்துகொண்டு இருக்கவில்லை. பலரது
காதல் வலையில் விழுந்து, பலரை காதலித்து கடைசியாக ஒரு இயக்குனரை மணந்துகொண்டார் ரிப்சி. அந்த இயக்குனரும் ரிப்சியை வெறும் பணதிட்காகவும் அவரது அழகுக்காகவும்தான் மணந்துகொண்டார் என்ற உண்மையும் ரிப்சிக்கு புரியாமல் இல்லை.
படத்தில் அவரோடு காதல் வயப்படும் காட்சிகள் எல்லாம்
அவரை உருகி உருகி காதலிப்பதாக வரும் காட்சிகள் எல்லாம் காட்சிகள் மட்டுமே ஒரு காட்சி கூட ரிப்சியின் வாழ்கையில் நிஜமாகவில்லை. அந்த ஏக்கம் சண்டையாகி அந்த இயக்குனரை பிரிந்தார். ரிப்சிக்கு ஒரு கரு உருவானபோது அது அந்த இயக்குனரின் வற்புறுத்தலால் கருகழைப்பை செய்துகொண்டார். இப்போது ரிப்சியிடம் இருப்பது கடற்கரை ஓரம் ஒரு அழகான மாளிகை. கோடிக்கணக்கான ரூபாய் அவரது வங்கிக்கணக்கில். இப்போதும் அவர் வெளியே சென்றால் அவரது புகழை அறிந்தவர்கள் அவரை மொய்துக்கொள்வார்கள். பணம், பேர், புகழ், ஆடம்பரம் இவற்றோடு தனிமை இதுதான் ரிப்சியின் வாழ்க்கை. தன்னுடைய உணவை தானே சமைத்து தானே சாப்பிட்டுவிட்டு தன் நிலையை கூட பகிர்ந்துகொள்ள ஒரு துணை இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த ரிப்சிக்கு திடீரென ஏற்பட ஒரு சப்தம் அவரை திகிலடைய செய்தது காரணம் அது ஒரு இரவு வேளை அத்தோடு அந்த வீடு சற்று ஜன நடமாட்டமற்ற ஒரு பகுதியாக இருந்தது.
ரிப்சி வேகமாக வந்து தனது வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்கம் ஒரு கார் மோதி இருந்தது. ரிப்சி தனது டார்ச் லைட் எடுத்து வந்து பார்த்தார். அந்த காரில் முப்பது வயது இருக்கும் ஒரு ஆண் கண் மூடியபடி இருந்தார். அவருக்கு ஏதாவது அடிபட்டிருக்குமோ என்று ரிப்சி காரின்
பக்கம் சென்று பார்த்தார்.
( தொடரும்...)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக