எந்தப் பெண்ணும்...
அழகில்லை
உன்னை போல்
யாருமில்லை!
எந்த கண்ணிலும்...
பவரில்லை
எதிலும் உன்போல்
ஒளியில்லை!
எந்தப் பூவிலும்...
மணமில்லை
எதுவும் உன்போல்
மணக்கவில்லை!
எந்த வார்த்தையும்....
கேட்கவில்லை
எதுவும் உன் சிரிப்பைப் போல்
இனிமையில்லை!
எந்த இனிப்பும்...
சுவைகவில்லை
அதில் எதுவும் உன்
கைப்படவில்லை!
எந்த புத்தகமும்...
படிக்கவில்லை
அதில் எதுவும் உன்
பெயர் எழுதவில்லை!
எந்த இசையும்...
மனதை உலுக்கவில்லை
எதுவும் உன்
குரல்போல் உயர்ந்ததில்லை!
இப்போது...
உறக்கம் பிடிப்பதில்லை
உணவும் சரியாய் உண்பதில்லை
எப்போதும்
உன்னை நான் மறப்பதில்லை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக