.சித்திர சிலையென...
ஒரு கன்னிகை
சிவந்த மேனியில்
உயர்ந்த ஆடையில்
யானைமீது உலா வந்தாள் !
. உள்ளம் உருகியது...
உயிர் விலகியது
யார் இவள்? பூலோகத்தில்
கால்பதிகவந்த தெய்வமகள்-என
மனம் அலைபாய்ந்தது கதிரவனுக்கு!
. கதிரவன் ஒரு கவிஞன்...
அவன் பலதேசம் கண்டவன்
தொழில் கவிதை எழுதுவது
வெகுநாள் கழித்து தன் தேசமாகிய
ராஜகிரிக்கு வந்தான்!
. வந்தவன்...
யானை மீது வருபவள்
ராஜகிரியின் அரசன் ராஜவரம்பனின்
ஒரே மகள் செவ்வந்தி
என்பது தெரியாமல் அவள் அழகில்
மயங்கி நின்றான்!
. எழுதினான் கவிதை...
செவ்வந்தியைப் பற்றி
" அவள் கூந்தால் காற்றில்
தவழ்வதாகவும் மேனியோ
நிலவை ஒத்திருபதாகவும்"
எழுதினான்.
. ராஜ ராஜவரம்பன்...
ராஜிய ரகசியங்களை காப்பவன்
ராஜகிரியை ஆழ்பவன்
ரங்கராஜனை நெஞ்சில் சுமப்பவன்
ஒரு கவிதை போட்டி வைத்தான்!
. பெரும் கூட்டத்தை அழைத்தான்...
தன் வேண்டுகோளை விடுத்தான்
செங்கோலுடைய அரசனின்
வேண்டுகோளை நிறைவேற்ற
மக்கள் காத்துக்கொண்டிருந்தனர்!
. மந்திரி மகாதேவன்...
செய்தியை அறிவித்தார்
இங்கு கூடியிருக்கும் மக்களுக்கு
ஒரு நற்செய்தி ராஜா ராஜவர்மன்
ஒரு கவிதை
போட்டி வைத்திருக்கிறார்
போட்டி வைத்திருக்கிறார்
அதில் சிறந்தவர் தன் மகள்
செவ்வந்தியை
செவ்வந்தியை
திருமணம் செய்து வைக்கப்படும்
என்று
என்று
அறிவித்து முடித்தார்!
. என்ன இது விபரீதம்?...
எப்போதும் உடல் சம்பந்தப்பட்ட
போட்டி தானே நடக்கும் இப்போது
அறிவு சம்பந்தப்பட்ட போட்டியை
அறிவித்து விட்டாரே ராஜா என்று
ராஜியமெங்கும் பேச்சு - இந்த
விஷயம் கடல் கடந்து போச்சு!
. புஜபலம் நிறைந்த மன்னர்கள்...
அவர்களது நிஜபலம் இதில்
தெரிந்துவிட்டது
போட்டிக்கு முன்பே கொடுத்தார்கள்
பேட்டி!
. அதில் கணிகை நாட்டு இளவரசன்...
கடும்பனும் ஒருவன்
அவன் கூரினான்
அவன் கூரினான்
தந்தையே என் அறிவால்
எல்லோரையும்
எல்லோரையும்
வெல்வேன் செவ்வந்தியை
என் வாழ்க்கை
என் வாழ்க்கை
துனையாகிக்கொள்வேன் என்றான்!
. அதற்கு கணிகை நாட்டு அரசனும்...
கடும்பனின் தந்தையுமாகிய இடும்பன்
கடும்ப இது எட்டுகட்டும் போட்டியல்ல எழுதிக்காட்டும் போட்டி- ஏதோ
சூட்சமதொடுதான்
போட்டியை
நடத்துகிறான்
ராஜா ராஜவர்மன் எனவே
மனதை தெளிவாக
வைத்துகொள் என்றார்!
. தந்தையே!...
எதையும் சாதிக்கும் திறமை
என்னிடம் உள்ளது
எழுதிக்கொள்ளுங்கள்
கவிதை எனக்கு கனியைப்
போன்றது
அந்த கனியை வீசி
கன்னியை பிடிப்பேன்
என்றான் கடும்பன்!
. சென்று வா மகனே!...
அறிவை கொண்டு போட்டியை
வென்று
அந்த அழகியை நம் நாடிட்கு
கொண்டுவா மகனே!
என்று வாழ்த்தி
அனுப்பினார் மகராஜா இடும்பன்!
(தொடரும்....)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக