பல்லவி
காதலே உன்னை காதலிக்கிறேன்...
அவளை எனக்கு காட்டியதாலே !
விழுந்து விதையானேன்
அவள் பார்வை பட்டு
மலர்ந்து செடியானேன்
அவள் வேர்வை தொட்டு
அசைந்து மரமானேன்
அவள்மேல் ஆசைக்கொண்டு
அடர்ந்த வனமானேன்
எல்லாம் மறந்துவிட்டு!
( காதலே உன்னை காதலிக்கிறேன்...)
சரணம்- 1
அவள் சாயம்போகா உதடுகள்-ஏன்
மௌனம் பூசி வருகிறதோ?
ஒரு சலனமும் இல்லா என் கண்கள்- ஏன்
சோலகொள்ள பொம்மை போல்
அவளைப் பார்த்து உருகுகிறதோ?
தூரத்தில் அவளைக் கண்டால் மனம்
அவளைத் துரத்திக்கொண்டு ஓடுதே
என் பக்கத்தில் வந்துவிட்டால் என்
மூச்சுகாற்று அனலாய் கொதிக்கிறதே!
( காதலே உன்னை காதலிக்கிறேன்...)
சரணம் - 2
வா எந்தன் வானவில்லே...
சாலை வளைவுகளில் அவள் வருகையிலே
பூக்களும் புத்துயிர் பெறுமே- என்
மனதிற்கு சற்று ஆறுதல் தருமே
அவள் விழிப்பார்வையால் என்னை
சல்லடையாய் சலித்து விடுதே
என்னை தாண்டி போகையில் என் கவலை
முதல் மழையாய் மறைந்துவிடுதே!
( காதலே உன்னை காதலிக்கிறேன்...)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக