. பல ஊர்...
பல தேசத்து
ராஜாக்களும்
ராஜகுமாறார்களும்
ராஜ்ஜியம் விட்டு
ராஜகிரியை அடைந்தனர்!
. எல்லோருக்கும் கவலை
ஒன்றுதான்
வாளைத் தீட்டியவர்கள்
அறிவைத் தீட்ட வேண்டும்
வாள்சண்டையை விட
அறிவால் சண்டையிடும்
போட்டி கடினம் என்பதை
உணர்ந்துதான் இருந்தார்கள்!
.ஒரு தேவதையை மணக்க..
கொஞ்சம் வேதனையும்
சுமக்கதானே வேண்டும்!
.எல்லோரும்...
வாளை புறம் தள்ளிவிட்டு
வெள்ளைத்தாளை கையில்
எடுத்தனர்!
. கவிதை என்ன கடையில்
வாங்கும் விஷயமா - இல்லை
எல்லோரும் கவிஞனாகிவிட
முடியுமா?
. இது என்ன ஒரே நாளில்...
வந்துவிடக் கூடிய
காரியமா?
.அழகை அடிமைப்படுத்த...
நினைபவனுக்கும்
அழகுக்கு
அடிமைப்படுபவனுக்கும்
வித்யாசம் இல்லையா?
. இல்லை செவ்வந்திதான்...
சுலபத்தில் கிடைதுவிடுவாளா
காதல் பந்தி விரிக்கும் முன்பே
காம ரசம் அருந்தியவர்களுக்கு
கவிதை எங்கிருந்து வரும்?
. கவிதை என்பது...
தேன் கூட்டை உடைக்காமல்
அதை ரசித்தபடியே
தேனையும் சுவைக்கும்- ஒரு
உன்னத கலை!
.அதை...
வாள் முனையில்
வெல்ல நினைபவர்களுக்கு
சற்று சிரமம்தான்!
. கவிதை போட்டியை...
பற்றி கேள்விப்பட்ட
கதிரவன் கைகால்
ஓடாது சிலையாய்
நின்றான்!
.கதிரவா...
என்ன ஆனது
உனக்கு எங்கே போனது
உன் மனது என்று
கதிரவன் சிலையென
நின்ற கோலத்தை பார்த்து
கேட்டார் கதிரவன் தந்தை
கண்ணபிரான்!
. தந்தையே...
ராஜா ராஜவர்மன்
அறிவித்த கவிதைப்போட்டியை
அறிந்தீர்கலா? அதில் நான்
கலந்துகொள்ளலாமா? என்று
தன் தந்தையிடம்
கேட்டான் கதிரவன்!
(தொடரும்....)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக