ஆசை இல்லா மனிதன் ஏது? அசை மனிதனை உயர்த்துகிறது. அந்த ஆசையே அதிகமாகி பேராசையாக மாறினால் அது அந்த மனிதனை தாழ்த்துகிறது. மகாபாரதத்தில் கௌரவர்களின் அழிவு மண்ணின் மீது உள்ள பேராசையால். இராமாயணத்தில் ராவணனின் அழிவு ராமனின் மனைவி சீதை என்னும் பெண்ணின் மீது உள்ள பேராசையால். ஆசை தேவைதான் அது எதுவரை தேவை என்ற கட்டுப்பாடு மட்டுமே உண்மையான ஆசைகளை பேராசை என்னும் விஷத்தன்மைக்கு நம்மை கொண்டுசேர்க்காது. ஒன்ரை இழந்தால்தான் மற்றொண்டு கிடைக்கும். ஒரு முழு கல் தன்னுடைய தேவையற்ற பாகங்களை இழக்கத்துனிந்தால்தான்
அழகான சிற்பம் பிறக்கும். வெறும் கல் சிற்பமாக வேண்டும் என்ற ஆசையில் தன்னை இழக்கிறது. அந்த இழப்பை சந்தோஷமாக ஏற்கும் போது நமக்கு சிற்பம் கிடைகிறது. நமது ஆசையும் அப்படிப்படதாக இருந்தால் அது சிற்பத்தை போல் மிக அழகாக மாறுகிறது. அந்த ஆசைகள் வெறும் வெளிப் பூசல்கலாக இல்லாமல் உள் கட்டமைப்பாக
இருக்கும்போது அது கடவுள் குடியிருக்கும் கருவறையாக நமக்கு காட்சியளிகிறது.
ஆசை என்பது உணர்சிகளின் அடையாளம். அது நம்மை மிக அழகாய் காட்டுவது அல்லது அருவருக்கத்தக்க வகையில் காட்டுவதும்
நம் கையில்தான் இருக்கிறது. ஆசை என்பது வண்டுகள் பூக்களில் தேன் எடுப்பது போல் மிக அழகாகவும் இயல்பாகவும் இருக்கவேண்டும்.
தேன் எடுக்கும் போது பூவிற்கும் வலிக்க கூடாது, வண்டுகளுக்கும் ஈர்ப்பு குறையக் கூடாது. உண்மையான ஆசைகள் யாரையும் காயப்படுத்த கூடாது. வெறும் காட்சி பொருளாக மட்டும் இருந்துவிடக் கூடாது. ஆசைக்கு அளவுகோல் உண்டு அது பேராசையின் துவக்கமாகிவிடாமல் நம்மை பாதுகாப்பதாகும்.
ஒருவரின் ஆசை அடுத்தவரை தொல்லை படுத்துவதாய் இருக்கக்கூடாது. அடுத்தவரை துன்புறுத்தும் ஆசைகள் எப்போதும் பேராசையைவிட மிக மோசமானது. ஆசை பலவந்தமாக வருவதல்ல, நம்மை பலவீனப்படுத்துவதகும் அல்ல. ஆசை ஒரு செயலின் துவக்கம். ஆசை நல்லவையாக இருப்பின் செயலும் நல்லவையாக இருக்கும் நமக்கு கிடைக்கும் பலனும் நல்லவையாகவே இருக்கும். அந்த நோக்கோடு சொல்லப்பட்டதே "அத்தனைக்கும் ஆசைப்படு". பிறரது உடமைகளையும், உழைப்பையும் நமக்கு சொந்தமாக்க ஆசைபட்டால் அது பேராசை அதற்காக சொல்லப்பட்டதுதான் "ஆசையே அழிவுக்கு காரணம்". இந்த உண்மையே ஆசையின் இலக்கணம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக