முன் கதை சுருக்கம்: கதிரவன் ஒரு கவிஞன் அவன் தனது நாடிட்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு வருகிறான். அவன் வரும்வழியில் ராஜகுமாரி செவ்வந்தி யானை மீது உலா வருகிறாள். செவ்வந்தியை பார்த்தவுடனே காதல் கொள்கிறான் கதிரவன். ராஜகிரியின் அரசனாகிய ராஜவர்மன் தன் மகள் செவ்வந்தியை திருமணம் செய்துவைக்க ஒரு போட்டியை அறிவிக்கிறார் அது அறிவு சம்பந்தப்பட்ட போட்டி என்பதால் அதை பிற ராஜாக்களும், ராஜகுமாரகளும்
குழப்பம் அடைகின்றனர். அந்த போட்டியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கதிரவன்
கலந்துகொள்ள தனது தந்தையாகிய கண்ணபிரானிடம் அனுமதி கேட்கிறான்
(இனி....)
. கதிரவா...
நீ இந்த நாடிட்குப்
புதியவன் உனக்கு
இந்த நாட்டின் சட்டம்
தெரியாது- நீ
அந்த போட்டியை பார்க்க
மட்டுமே அனுமதியுள்ளது
அந்த போட்டியில்
கலந்துகொள்ள அல்ல!
ராஜாக்களும் ...
ராஜாக்களின் மகன்கள்
மட்டுமே கலந்து
கொள்வார்கள் - நீ
ராஜவின் மகனல்ல
தேரோட்டியின் மகன்
அதனால் உன் நினைப்பை
மாற்றிகொள் என்று
கூரிவிட்டு சென்றார்
கண்ணபிரான்!
சில நேரம்....
அறிவுக்கு எட்டியது
மனதிற்கு எட்டுவதே
இல்லை
கதிரவன் மனது காந்தம் போல்
செவ்வந்தியின் முகமே
கண்ணுக்குள்
ஒட்டிகொண்டிருந்தது!
போட்டி நாள்...
அருகில் வந்துகொண்டிருந்தது
அவன் அறிவிற்கு கவிதை
தீனிபோட்டுகொண்டிருந்தது அவன்
மனதிற்கு செவ்வந்தியின் நினைவு
தீனிபோட்டுகொண்டிருந்தது!
சாதரணமாக....
ஒருவன் காதலித்தால்
கவிதை என்றால் என்னவென்றே
தெரியாதவன் கூட கவிதை
எழுதுவான்!
காதலிப்பவன்...
முன்னமே ஒரு
கவிஞன் என்றால்
கவிதை எழுத
சொல்லிய தரவேண்டும்!
காதல்...
வந்துவிட்டால்
ராஜா மகளென்ன
ராப்பிச்சைகாரன்
மகளென்ன
கற்பனையில்லேயே
காலம் ஓடிவிடும்!
கதிரவன்...
கற்பனை ஓட்டம்
குதிரை ஓட்டத்தை விட
அதிகமாக இருந்தது!
தகுதி என்பது...
திறமையில் உள்ளது
அதை பிறப்பொடு
ஒப்பிடுவது
அநாகரிகமானது என்பது
கதிரவன் வாதம்!
பிறக்கும்...
எல்லோரும்
ராஜகுமாரர்கலாக
பிறப்பதில்லை- அப்படி
பிறந்தவர்கள் என்பது
மட்டுமே செவ்வந்தியை
மணக்க தகுதியில்லை என்று
தன்னுடைய கோபத்தை
கவிதையில் கட்டிகொண்டிருந்தான்
கதிரவன்!
போட்டிக்கான நாள்....
வந்தது
போட்டிக்கு முன்பே
பேட்டியளிதவர்கள்
மூர்கமாக
அமர்ந்திருந்தனர்!
எல்லா...
மன்னர்களும்
அமர்ந்த பிறகு
ஒரு இருக்கை
காலியாக
இருந்தது!
கூட்டம்...
அதிகமாக
கூடி இருந்தது
மன்னர்களும்,
மன்னர் மகன்களுடைய
மனம் வெற்றியை
நாடியே இருந்தது!
செவ்வந்தி...
சிவந்த மேனியில்
உயர்ந்த ஆடையில்
தேவதையை போல்
தவழ்ந்து வந்தாள்!
உதிர்ந்த பூக்கள்...
கூட அவள்
நடந்து வருவதை
பார்த்து
புன்னகை
பூத்தது!
கதிரவன்....
கண்கள் செவ்வந்தியை
தாண்டிச் செல்லவில்லை!
செவ்வந்தி...
அவன்
வாழ்கையை
அழகாக்க வந்த
சாமந்தி
என்று அவன்
மனம் இடைவிடாது
சொல்லிக் கொண்டிருந்தது!
அனைத்து அரசர்களும்...
ஆவலோடு செவ்வந்தியை
பார்த்தனர் அனைவரது
கவனமும்
செவ்வந்தி என்னும் அழகை
சொந்தமாக்கி ஆளவேண்டும்
என்பது!
கதிரவனுக்கு...
மட்டும் அவள் மனதை
ஆளவேண்டும் என்பது!
ஒரு பெண்...
தான் சந்திக்கும்
ஆடவன் எந்த நோக்கோடு
வருகிறான், எந்த கண் கொண்டு
தன்னை பார்கிறான்
என்னும் பாடம்
படிக்காமலே உண்மையாக உள்ள
பெண் உள்ளத்திற்கு புரிந்துவிடும்!
அதிலும்...
செவ்வந்தியோ சிறந்த
மதியுடையவள், ஒவ்வரு ஆணின் பார்வையை
வைத்தே அவர்களது நடத்தையை
எடைபோடும் இளவரசி அவள்,
என்பது புரியாமல்
பார்த்துகொண்டிருந்தனர் அனைவரும்!
எதிர்ச்சையாக...
கதிரவன் கண்களை
பார்த்தாள் செவ்வந்தி
அதில் காதல்
குடிகொண்டிருப்பதை
அறிந்து கொண்டாள்!
செவ்வந்தி...
பேரழகி மட்டுமல்ல
இனிய பாடகி
ஆடும் கலையில் மேனகை
கவிதை எழுதும்
தாரகை
மனிதர்களை எடைபோடுவதில்
மணிமேகலை!
எவன் பெண்ணின்...
கண்களை
அதிகம் நேசிக்கிறானோ,
ரசிக்கிறானோ அவன்
பெண்களால்
நேசிக்கவும், ரசிகவும் படுவான்!
கதிரவன்...
கண்களால் விட்ட
காதல் தூதை செவ்வந்தியின்
கண்கள் ஏற்றுகொண்டது
இரு கண்கள் விடும்
தூதை இரு
கண்கள் புரிந்துகொண்ட பின்
வார்த்தை தான்
எதற்கு?
கவிச்சக்கரவர்த்தி கம்பனும்....
தன் கவிதையில்
ராமன், சீதை காதலை
" அண்ணலும் நோக்கினார்
அவளும் நோக்கினாள்" அவ்வளவுதான்
காதல், திருமணம் முடிந்துவிட்டது
என்று ஒரு வரிக்குள் காதலை சொன்ன
கம்பன் பிறந்த நாடல்லவா, ஆகையால்
முதல் பார்வையிலேயே கதிரவனை செவ்வந்திக்கு
பிடித்து விட்டதற்கு ஆச்சரியம்
எதற்கு?
இருவரது கண்ணும்...
கலந்தது
ஒரு நிமிடமானாலும்
ஒரு யுகம்
பார்த்து பழகியது போல்
ஒரு
உணர்வு இருவருக்குள்ளும்!
(காதல் தொடரும்...)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக