நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதன் பேரில் சர்வ நாசத்தை நோக்கி செல்கிறது இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்கும் திட்டம். இப்போது நம் முன் நிற்கும் கேள்வி இதுதான் நம் நாடிட்கு தேவை பாதுகாப்பா? அல்லது முதலாளிகளுக்கு லாபம் சேர்க்கும் அணுமின் நிலையமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். அந்த முடிவு செய்வதற்குள் வேறொரு பிரச்னையை உசுப்பேத்தி வேறொரு பிரச்னையை நம் தலையில் சுமத்தி மக்களை குழப்பிவிடுவதில் நம் நாட்டு அரசியல் சாணக்கியர்களுக்கு சொல்லியா தரவேண்டும். ஜப்பானில் அணுமின் நிலையம் வெடித்து பலர் கதிர்வீச்சு காரணமாக பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே, அதை அறிந்ததை வீட பயந்ததே அதிகம் அப்படி இருக்க மக்களுக்கு தேவை பாதுகாப்பா? இல்லை மின்சார காப்பா? என்பது விடை தெரிய வேண்டிய முக்கிய கேள்வியாக நம் மனதில் நிற்கின்றது.
மின்சாரம் என்பது மனிதனின் வசதிக்காக படைக்கபட்டது.அந்த
வசதிக்கு நாம் அடிமையாகி இப்போது வசதி முக்கிய தேவையாகி விட்டது.
பசி, தாகம், தூக்கம் என்பதெல்லாம் போய் பணம், ஆடம்பரம், அதிகாரம் என்பது முக்கிய தேவையாகிவிட்டது இப்போது. இயற்கை அழிகிறது, அழிகப்படுகிறது என்று காட்டு கத்தலாக கத்தினாலும் யார் காதிலும் கேட்கபோவதில்லை. அதன் அபாயம் மனிதனை ஆட்டிவைக்கும் போது கதறி அழுது பிறியோஜனம் இல்லை.
இப்போது வாழும் தேனிகள் இறந்தால் மனிதனின் வாழ்க்கை ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக அர்த்தம் காரணம் தேனிகள் இல்லை என்றால் பூக்களுக்குள் மகரந்த சேர்கை நடக்காது பிறகு பூமியின் தன்மை முழுவதாக
மாறிவிடும். இப்போதே பல தேனிகள் அலைபேசி கதிர்வீச்சல் உயிரிழந்து விட்டது, சிட்டுகுருவி இல்லாமல் ஆகிவிட்டது. தவளைகள் இனம் அழிந்து கொண்டே வருகிறது. தாவரங்கள் என்டோசல்பான் போன்ற பூச்சிக்கொல்லி மருந்தால் புண்பட்டு விட்டது. ஆறுகள் சாக்கடையாகிவிட்டது. கடல் மாசடைந்து வருகிறது. பனிக்கட்டி மலை உருகிக்கொண்டு வருகிறது. யானைகள் சாகடிக்கப்படுகின்றன.வாயுமண்டலம் நச்சு புகையால் அமில மழை பொழிய தயாராகி கொண்டிருகிறது, காடுகள் அழிக்க பட்டுக் கொண்டிருகிறது. பூமி வெப்பமயமாகி கொண்டிருகிறது, மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது, ஓசோன் படலம் ஓட்டையாகி விட்டது.
இவ்வளவும் மனிதனின் சுயநலத்தால் நடந்தவை. இது பத்தாதென்று தீவிரவாதம் தலைதூக்கி அங்கங்கே வெடி குண்டுகள் வடித்து கொண்டிருகிறது, வாகன விபத்துகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இவ்வளவும் தாண்டி பூமி சுழன்றுகொண்டு தன் கடையை சரியாக செய்கிறது என்றால் அது நம் அதிஷ்டம். இவ்வளவும் பத்தாதென்று இப்போது அணுமின் நிலையம் அமைத்து சுற்றுப்புற சூழலை அழிக்க அரசே முன்வருகிறது என்றால் எப்பேர்பட்ட அரசை நாம் ஆட்சியில் அமர்தியிருகிறோம் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். இப்போது நமக்கு தேவை பாதுகாப்பா? அணுமின் நிலையமா? மக்களே கொஞ்சம் நல்ல தீர்ப்பை தேர்வு செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக