சனி, ஆகஸ்ட் 06, 2011

உலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி...


உலக நாடுகளின் பொருளாதார சரிவைசந்தித்து கொண்டிருக்கும் காலம் இது.  ஒரு மிக பெரிய வல்லரசு நாடு என்று தன்னை எப்போதும் அறிவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா சற்று ஆட்டம் கண்டிருக்கிறது. உலக நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் உள்ள ஜப்பானும், அமெரிக்காவும் இப்போது சரிவை சந்தித்துள்ளது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னை வளர்ந்த நாடக, வல்லரசு நாடக உயர்த்திக்கொள்ள இந்தியாவுக்கும், சீனாவிற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே கிரேக்கம், போர்சுகல், பிரேசில், இத்தாலி போன்ற நாடுகள் பொருளாதார சரிவால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆளுமை திறன் வாய்ந்த பொருளாதார வளர்ச்சியை எட்டாத போது அந்த நாடு எந்த உயரத்தில் இருந்தாலும் அதன் அடிப்படை ஆட்டம் கண்டுவிடும். அந்த ஆளுமை திறன் வெறும் நிகழ்காலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு எடுக்கப்படும் முடிவுகளின் எதிர்வினையாக மாறிவிடுகிறது. அப்படி நிகழ்காலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் எப்படி ஆளுமை திறன் மிக்கதாக இருக்கும்.எந்த
 ஒரு பொருளாதார முடிவுகளும் எதிர்காலத்தை நோக்கி பின்னப்பட்டு இருக்கிறதோ அதுதான்  முழுமையான ஆளுமை திறனோடு உள்ள பொருளாதார வளர்ச்சி என்று நாம் குறிபிடலாம்.


ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்பது அந்த நாட்டின் முக்கிய முடிவுகளை கூட பாதிக்கும். அப்படி அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி பங்குச்சந்தையை பாதித்தது தெளிவாகிறது. ஒரு ஆளுமை திறன் கொண்ட பொருளாதார கொள்கையை அமெரிக்க இழந்துவிடும் அபாயத்தில் உள்ளது. கனிமவளங்கள் குறைவாக உள்ள அமெரிக்க மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தையே முக்கிய மூலதனமான  செயல்பாடு பொருளாதார வீழ்சிக்கு ஒரு காரணம் என்று குறிப்பிடலாம். இதில் இருந்து மீள அமெரிக்க மற்றும் இதர நாடுகள் இந்தியா  உள்பட கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்த பொருளாதார வீழ்ச்சி ஒவ்வரு தனிமனிதனையும் பாதிக்க கூடியவை ஆகையால் இந்த பொருளாதார வீழ்சிக்கு ஒவ்வரு தனிமனிதனுக்கும் பங்குண்டு. இந்த பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்வது நமது கடமையாகும். அமெரிக்கா தான் பாதிக்கிறது இந்திய தப்பித்து விட்டது, இந்தியாவிற்கு அதிக பாதிப்பில்லை என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூருவதை அப்படியே ஏற்பதை விட்டுவிட்டு இந்தியாவிற்கு அத்தகைய நிலைமை வராமல் தடுப்பதே இப்போது நாம் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக