திங்கள், ஆகஸ்ட் 01, 2011

கண்ணதாசன் காலத்தால் மறக்கமுடியாத காவியத்தலைவன்...


கண்ணதாசனை அறியாதவர் மிகச்சிலரே இருக்கமுடியும். கண்ணதாசன் பாட்டை வாழ்கையாக்கவில்லை, வாழ்கையை பாட்டாகிய வள்ளல். காலம் கண்ணதாசனுக்கு கொடுத்தது அனுபவம். அந்த அனுபவம் கொடுத்தது பாட்டை, கண்ணதாசனுக்கு  பாட்டை எழுத ஆரம்பித்தால் அந்த பாட்டு தானாக வந்து தாளை நிரப்பிவிடும். அவர்
கடவுளை வெறுத்தபோது அவருக்கு இந்த ஞானம்  பிறக்கவில்லை. ஏன் நாத்திகனானோம் என்று தெரியாமல் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்ததோடு, அரசிய   என்றல் என்னவென்றே தெரியாமல்  அரசியலில் புகுந்து பின் அதற்காய்
 சிறைக்கு சென்று பெற்ற பலவிதமான கெட்ட அனுபங்களுக்கு பிறகு கெட்ட பின்பு ஞானியாகி,  தான் 
   செய்தவை யாவும் தவறே என்று உணர்ந்து அதன் பிறகு  எழுதிய புத்தகம் தான் "அர்த்தமுள்ள  இந்துமதம்".


கண்ணதாசன் பல காயங்களை மனதுக்குள் சுமந்து, பல காவியங்களை படைத்தவர். அவரது அனுபவத்தில் கூரும்போது இப்படி குறிப்பிடுகின்றார்       "வாழ்கையை எப்படியெல்லாம் வாழகூடதோ அப்படியெல்லாம் வாழ்த்து விட்டவன், அதனால் வாழ்க்கையை இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கியதை   எமக்கு உண்டு".

கண்ணதாசன் பாடல்கள் காயப்பட்ட இதயத்திற்கு  மருந்து. தெளிவில்லாத மனதுக்கு ரசவாது. சிந்திக்கும் அறிவிற்கு அறுசுவை விருந்து. புறம் பேசும் மனிதர்களைவிட்டு தள்ளிச் சென்று மௌனத்தின் அகம் பார்கவைப்பவை. சிரிக்கும் குழந்தையின் சிணுங்கலும், மொட்டின் வெடிப்பு மலர்தளுமான ஒரு தன்மை அந்த கவிதையில் இருக்கும். காற்று கீதம் பாடினால் அதை ரசிக்காத மனம் கூட கண்ணதாசன் பாட்டு திரையில் பாடினால் கேட்டு மயங்கும். 
கண்ணதாசன் பற்றிய என்னுடைய கற்பனை கவிதை

                    ஆடியாடி அலைந்தவன்..
                                            ஆண்டவனை துணைக்கு
அழைத்தவன்!


              கூட்டத்தில் சிரித்தவன்....
                                                தனிமையில் அழுதவன்            
          வாடி மனது வதங்குதல்
                                           கண்டு வாடாது எழுந்தவன்!

பல பாட்டை....
                                               பாமரும் புரியும்படி 
                    கவியம்பு தொடுத்தவன்!

                            வெள்ளையாடை உடுத்துபவன்... 
                                                           வெள்ளாடாய்  உலாதுபவன்
                                       கையில் பேனாவை தொட்டுவிட்டால்
                                                         கவிதையாய் கரைபவன்!

                                  கண்ணதாசன் காலத்தால் மறக்கமுடியாத....
                                       கபடம் அறியா கவித்துவம் வாய்ந்த
ஒரு நல்ல மனிதன்!

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக