புதன், ஜூலை 20, 2011

சின்னகுயில் பாடும் பாட்டு கேட்குதா...

எல்லோர் காதிற்கும் ஒரு இனிப்பான செய்தி சின்னகுயில் சித்ரா தன்னுடைய சோகத்தை மறந்து நம்மை சந்தோசபடுத்த நமக்காக மீண்டும் பாடவருகிறார்.
"சின்னகுயில் பாடும் பாட்டு கேட்குதா... " என்று எல்லோர் காதிலும் தன் இனிய குரலால் நம்மை தாலாட்டியவர். தன் மகளின் பிரிவில் இருந்து மீண்டு, மீண்டும் நமக்காக பாடவருவது சந்தோஷத்தில் துள்ளி குதிக்கத்தோன்றுகிறது. 
தன்னுடைய  எட்டு வயது தவமிருந்து பெற்ற குழந்தையின் இழப்பு அதனுடைய சோகம் அந்த தாய்க்கு மட்டுமே புரியும். தள்ளிநின்று பார்பவர்களுக்கு புரியாது. அதற்குதான் தாய்பாசம் என்ற  சிறப்பு பெயரை  கொடுத்து தாய்க்கு மரியாதை கொடுகின்றோம். ஒரு தாயின் அன்பு எதனுடனும், யாருடனும் நம்மால் ஒப்பிடவே முடியாது. எந்த உறவும் தாய்பாசத்தை மிஞ்சிவிட முடியாது. யாரும் ஒரு தாய் போல் இருக்கலாமே தவிர அந்த தாயாக இருக்கமுடியாது. தாய்மை ஒரு மழைத்துளியை போல இயல்பானது. ஒரு பூவை போல மென்மையானது. ஒரு மலையை போல உறுதியானது, உயர்வானது, உண்மையானது,உயிரானது, உணர்வானது.அப்படிப்பட்ட தாயின் வருகை கொண்டாடப்படவேண்டாமா?  
 ஒவ்வரு பூக்களுமே சொல்கிறதே...
வாழ்வென்றால் போராடும் போர்களமே,
ஒவ்வரு விடியலுமே சொல்கிறதே
இரவென்றால் பகலொன்று வந்திடுமே!
பா.விஜய் எழுத்தும் சின்னகுயில் குரலும் ஒலிக்காத ஊரே இல்லை,இதை கேட்டு எத்தனை பேர் தன்னம்பிக்கை அடைந்தார்கள். சின்னகுயில்
முகத்தில் எப்போதும் அழகான சிரிப்பு. ஒருமுறை  இயக்குனர் பாலா அவர்களிடம் அவருக்கு பிடித்தவர்களை பற்றி கேட்கும்போது அவர் சின்னகுயில் சித்ரா அவர்களை மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அவர் அதிகமாய் சிரிக்கமாட்டார் ஆனால் எப்போதும் சிறித்தமுகமாக இருக்கும் சித்ரா அவர்களை பிடிக்கும் என்றாராம். என்னை கேட்டால் "சின்னகுயில் சித்ரா" என்பதற்குபதில் " சிரித்தமுகம் சித்ரா" என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.    
சொல்ல மறந்துவிட்டேன் சின்னகுயில் பாடப்போவது ஒரு மலையாள படத்தில். படத்தின் பெயர் " இஷ்டம் + சிநேகம் = அம்மா" சம டைட்டில், தமிழ் படமும் இப்படி டைட்டில் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுபோகட்டும் சின்னகுயில் சித்ரா அவர்களை இசை உலகிற்கு  மீண்டும்  வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக