மரம், மனிதனோடு பேசியதில்லை என்ற ஒரே காரணத்தினால் மனிதன் மரங்களை வெட்டி காசாக்குகிறான். மரம் பேசாதுபோனதால் மனிதர்கள் மனதில் உரமின்றி வெட்டி காசாக்குகிறார்கள். அந்த மரதிட்காக வாதாடும் மரமாக நான் நிற்க விரும்பினேன்.
ஏ! மதிகெட்ட மனிதா...
என்னை கொல்வது
உனக்கு இனிதா?
நீ...
என் கண்முன்னே-என்
மரத்தோழர்களை வெட்டினாய்-பின்
நிழலுக்காக என்னைத்தானே தேடினாய்!
உனக்காக...
கார்பனை விழுங்கி
நீ சுவாசிக்க சுவாசத்தை
சுத்தபடுத்தி தந்தேன்!
பாசமேயில்லாமல்...
என் பாரம்பரியம் தெரியாமல்
வெட்ட நினைக்கிறாய் என்னை!
உன்னை காப்பவன்...
என்ற அறிவில்லாமல்
காசிற்காக வெட்ட வருகிறாயே என்னை!
வேடிக்கை பார்கிறேன் இன்று....
என் வேதனையைத் தாங்கிக்கொண்டு
என்னை கொன்றால் நாளை
உன் குடும்பம் அழியும், நாடு அழியும்,
பின் இந்த உலகமே அழியும் தெரிந்துகொள்!
மரம் வெட்டிகளே நீங்கள் வெட்டுவது மரத்தை மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் வாழ்கையை, சந்தோசத்தை, நிம்மதியை. நீங்கள் வெட்டுவது பணதிற்காக. அதே பணத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் உங்களால் அதே போல் ஒரு மரத்தை உருவாக்க முடியாது. இதை புரிந்துகொண்டால் இந்த வாழ்க்கை மிக இனிய வாழ்க்கையாக
அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக