ஞாயிறு, ஜூலை 24, 2011

யானைகளை காப்பற்றவேண்டிய நாமே அதை வதைக்கிறோம்...



         யானைகள் விவசாய நிலங்களை துவம்சம் செய்வதாகவும் அதை விரட்ட வெடி வைப்பதும், அதை விரட்டியடிப்பதும் நம்முடைய மனசாட்சியை மண்ணிற்குள் புதைத்துவிட்டு யானைகள் மீது பழிபோடுகிறோம். யானைகளுக்கு எப்போதுமே ஒரு குணமுண்டு அவைகள் பழையதை எப்பொதும் மறப்பதில்லை ஆனால் மனிதர்களுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு அது பழையது நினைவில் வைப்பதே இல்லை. நாம் எப்படி முன்னேறினோம் என்பதையும் அதற்கு உதவியவர்களை கூட நாம் அலச்சியம் செய்வது என ஒரு மொக்கையான வாழ்க்கையை வாழ்கிறோம். அப்படிப்பட்ட நாம் யானைகள் வந்து போகும் பாதையை வழிமறித்து கோவையில் உள்ள மருதமலையை சுற்றி பல பள்ளிகள், அமிர்த தொழில்நுட்ப கல்லுரி, தியானலிங்கம் என்று அடுகடுகான கட்டிடம் கட்டி "வெஸ்ட் காட்ஸ் மற்றும் ஈஸ்ட் காட்ஸ்" என சொல்லப்படும் யானைகள் வந்துபோகும் பகுதியை வளைத்து வளைத்து கட்டடம் கட்டிவிட்டதும். யானைகள் தாங்கள் வரும் பாதைகள் அடைக்கப்பட்டு அதற்கான குடிநீர் தேடி வயலில் உள்ள வாசத்தை நுகர்ந்து வருகின்றன. அந்த யானைகள் மீது எந்த தவறும் இல்லை. அப்படி வரும் யானைகள் வேட்டு வைத்து துரத்துவதும் அதை துன்புறுத்துவதும் என்பதை தாண்டி அந்த யானைகளுக்கு ரேடியோ காலர் மாட்டுகிற பெயரில் அதை துரத்தி அதில் ஒரு  யானை  பெரிய குழிக்குள் விழுந்து இறுதியாக உயிரை விட்டது.

                நான்  கேட்பது இதுதான் அந்த யானை செய்த குற்றம் தான் என்ன? செய்த தவறெல்லாம் நாம் செய்துவிட்டு எதற்காக ஒன்னும் தெரியாத யானைகளுக்கு ஒரு கைதிக்கு விளங்கிடுவது போல் யானைகளுக்கு ரேடியோ காலர் மாட்டி அதை அடிமையாக்க நினைக்கிறோம். அதனுடைய சுதந்திரத்தை பறிக்கும் மனிதவக்கிரம்  என்பது புரியாமல் ஒரு யானை இறந்த பிறகு அந்த முடிவு முட்டாள்தனமானது என்று கூரி என்ன பெறப்போகிறோம்? யானையை காப்பாற்ற எடுக்கும் முயற்சியை கைவிட்டு பிச்சை காசிட்காகவும், ஆடம்பர வாழ்கைக்காகவும் பணம் பெற்றுக்கொண்டு பிழைப்பு நடத்துவதும். பணமிருக்கும் திமிரில் எல்லாவற்றையும் சொந்தமாகிகொண்டு சுயநல மனிதர்களுமாக வாழ்வது ஒரு வாழ்க்கையல்ல என்பதை நினைவில் கொண்டு உடனடியாக அந்த யானைகள் வரும் பாதையை சரிசெய்து செய்த பாவத்தை கலுவிகொண்டால் நல்லது. இதை உடனடியாக செய்யா விட்டாலும் அதற்கான முயற்சிகள் எடுத்தாள் யானைகள் நம்மை பயமுறுத்தாது. நாமும் யானையை விரட்டும் அவசியம் இருக்காது.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக