சமச்சீர் கல்வி தேவையா? இல்லையா? என்பது நீயா? நானா? என்ற நிகழ்ச்சியை போல் விடாமல் சண்டைபோடுகிறது தமிழக அரசு. ஒரு கல்வி என்பது யாராலும் அழிக்கமுடியாத,திரும்பிபெற முடியாத சொத்து அதை உணர்துதான் ஆதிகாலத்தில் ராஜாக்கள் கூட தங்களது மகனையோ மகளையோ குருகுல கல்விக்கு அனுப்பிவைத்தனர். குருகுலம் என்பது ராஜாமகன் என்றோ சிப்பாய் மகநென்றோ பார்க்காமல் பொதுவான கல்வியை போதிப்பர் அதுவே சமச்சீர் கல்வி என்பது. இங்கு எங்கும் சமச்சீர் கல்வியை காணமுடியவில்லை. சமச்சீர் கல்வி என்ற பெயரில் வெறும் பாடங்கள் குறைகபட்டுள்ளது. இப்போது நவீனமயமான காலகட்டத்தில் சமச்சீர் கல்வி என்று ஒரு வேகதடையைதான் புகுத்தி இருக்கிறது என்று ஒருபக்கம் பார்த்தாலும். அது சரியான கல்வியல்ல என்று அதை தடைசெய்ய தமிழக அரசு எடுக்கும் முயற்சி உண்மையில் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. காரணம் பசித்தவனுக்கு காய்த்த ரொட்டி துண்டு கிடைத்திருந்தால் அவனுக்கு அது பசியாற்றி இருக்கும் அதை தட்டிவிட்டு அது சுவையாக இல்லை அதனால் அவன் சும்மா இருந்தாலும் பரவாயில்லை அந்த ரொட்டி துண்டை மட்டும் தின்றுவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ளது தமிழக அரசு.
கல்வி என்பது அறிவு வளர்சிக்கே தவிர ஆடம்பரத்தை காட்டுவதற்கு இல்லை. அறியாமை அகற்றவே கல்வி இருக்கவேண்டுமே தவிர அறிந்தவைகளை அறியாமையக்குவதட்கு இல்லை. இதை புரிந்துகொண்டு அரசு மாணவர்களுக்கு எது சிறந்ததோ அதை உடனடியாக செய்ய வேண்டும். இதுவே மாணவர்களுக்கு அரசு செய்யும் சிறந்த தொண்டாகும். சமச்சீர் கல்விக்கு வேண்டும் சமத்துவமே தவிர சண்டை, சச்சரவு அல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக