வந்தாரை வாழவைக்கும் ஊர், மரியாதைக்கு மரியாதை கொடுக்கும் ஊர் என்றெல்லாம் கோவையை நினைத்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வரு கொடூரமாய் நிகழ்த்து கொண்டிருகிறது. நான் மனமுடைந்து வெறுத்துப் போன இரு குழந்தைகளின் கொடூரமான கொலைகளில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அடுத்து கோவையை துவம்சம் செய்யும் செய்திகள் மேலும் மேலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பட்டியலிட்டு கூர மனம் தகிக்கிறது, உணர்ச்சி வேகத்தை அடக்க முடியாமல் தவிக்கிறது. ஒவ்வரு கொடுமை நிகழ்ந்தபின் யார் தடுப்பது இந்த குற்றங்களை. நடந்த பின்பு யாரை குற்றம்சாட்டி என்ன பலன் பெறமுடியும்?இனியாவது இப்படி ஒரு கொடூரம் நிகழாது தடுப்பது அவசியம்.
கோவை மக்களை பலவாறு பயமுறுத்திக் கொண்டிருக்கும் திருட்டு, கொள்ளை,வழிப்பறி என்று அடுக்கிகொண்டே போகலாம். முன்பு பைக் மற்றும் கார் திருட்டு அதிகமாகி இருந்தது இப்போது பல இடங்களில் வீடு புகுந்து திருடுவது அதற்காக நடத்தப்படும் கொலைகள் என்று கொலை ஒரு பொழுதுபோக்க மாறி இருக்கிறது கோவை நகரம். புதியவர்கள் யாரேனும் சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களை கண்காணிப்பது அவசியம்.
கோவையில் இப்போது விபத்திற்கு பஞ்சமே இல்லை. என்னதான் காவல் துறை தொண்டை வலிக்க கத்தினாலும் யாரும் தலை கவசம் அணிய தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. சாலை விதிகளை மதிப்பதே இல்லை. குடித்துவிட்டு வண்டியோட்டுவது என்று பல கண்ணுள்ள குருடர்கள் உலாவிக்கொண்டிருக்கும் போது, யாரை குறைசொல்வது எல்லோருமே குற்றவாளி கூண்டில் நிற்கும்போது.
விபத்தை தடுக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் இருந்தால் கண்டிப்பாக விபத்தை தவிர்க்கலாம்.
கோவையை மொட்டையடிக்கும் விதமாக மரங்களை வெட்டி சாய்க்கும் வெட்டி மனிதர்கள் தட்டி கேட்டு தடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்வது. மரத்தை, இயற்கையை கொன்று உயிர்வாழ துடிக்கும் சில -------------------------- களை நைய புடைத்தால் சரியாகிவிடும் இந்த நிலைமை.
மனிதனின் சுயநலதிற்காக எல்லாத்தையும் அழித்தான். இந்த யானை சாவதற்கும் அதே சுயநல மனிதன்தான் காரணம். சுயநல மனிதர்களே கொஞ்சம் அடுத்த தலைமுறை கொஞ்சம் வாழ்வாதற்கு வகை செய்யுங்கள்,கொஞ்சம் இயற்கையை விட்டுவையுங்கள். வெறும் பணம் மட்டும் அவர்களுக்கு சுவாசிக்க உதவாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக