சமீபத்தில் வால்- இ என்ற அனிமேஷன் படம் பார்த்தேன். மிக அழகான காதல் கதையை அற்புதமாக ரோபோட்டுகள் மூலம் சரியாக செய்திருக்கிறார்கள். வால்-இ என்ற ஒரு சிறிய ரக ரோபோட் பூமியில் குப்பைகளை அள்ளி சேமிக்கும் வேலையை செய்துகொண்டிருகிறது. அந்த வால் - இ க்கு துணையாக ஒரு சின்ன கரப்பாம்புசி என்று இருவர்மட்டும் உலகம் என்று வாழ்த்து கொண்டிருக்கும்போது ஒரு விண்கலம் பூமியை நோக்கி இறங்குகிறது.
ஈவா மீண்டும் தன் நிலையை அடைகிறது. ஈவாவுகும் வால் - இகும் இடையே நட்பு மலர்கிறது. அப்போது வால்- இ தன்னிடம் உள்ள செடி (Plant ) ஒன்றை காட்டுகிறது. ஈவா தேடிவந்ததும் அந்த செடியைத்தான். ஈவா அந்த செடியை தனக்குள் மறைத்துவிடுகிறது. அதன் கடமை முடிந்ததும் ஈவாவை விண்கலம் கூட்டிச்செல்கிறது அப்போது வால் - இ அந்த விண்கலத்தில் தாவிபிடித்துகொண்டு விண்வெளிக்கு செல்கிறது.
வால் -இ ரோபோட் ஈவா ரோபோட்டை மீட்டு எப்படி பூமிக்கு கொண்டுவருகிறது என்பதுதான் மீதி கதை. அழகான அனிமேஷன், சவுண்ட் எபக்ட் என்று அசத்தி இருகிறார்கள். வால் -இக்கும் ஈவாவிற்கு உள்ள காதலை அந்த உணர்சிகளை அழகாக காட்டி இருகிறார்கள் ஸ்பெசல் எபக்ட்ஸ் மூலமாக. மொத்தத்தில் வால் - இ அனிமேஷன் படம் அனைவரும் பார்த்து ரசிக்கவேண்டிய அழகான படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக