என் கற்பனை வளத்தை கொஞ்ச கொஞ்சமாய் ஊட்டியது திரு.கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்", "பார்த்திபன் கனவு", " சிவகாமியின் சபதம்" என்றால் அது மிகையாகது. ஒரு புத்தகத்துக்குள் ஆதி காலத்தின் சுவடுகளை கண்முன் காட்ட வைத்த கல்கி அவர்களின் எழுது யாராலும் அவரைப்போல் எழுதிவிட முடியாது என்றே சொல்லவேண்டும்.எனக்கு
புத்தகம் படிக்கும் பழக்கம் கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" புத்தகம் படித்த பின்புதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
திரு.கல்கிக்கு பிறகு என் நண்பரால் அறிமுகமானது திரு.சாண்டில்யன் அவர்களின் "யவன ராணி ","ஜல தீபம்",
"கடல் புற". சாண்டில்யன் அவர்களின் எழுத்திற்கும் கல்கி அவர்களின் எழுத்திற்கும் உள்ள வித்யாசம் என்னவென்றால் சாண்டில்யன் அவர்கள் ஒரு சிறிய விஷத்தை கூட தனது வர்ணனை முலமாக
நம்மை வசியம் செய்துவிடுவார். இவரது சரித்திர நாவல்கள் இன்றும் சரித்திரம் படைக்கிறது.
அடுத்ததாக என்னை கவர்ந்த எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள். அவரது விஞ்யான நவல் நான் மிகவும் ரசித்து படித்தது. குறிப்பாக "என்? எதற்கு? எப்படி?", " என் இனிய இயந்திர","மீண்டும் ஜூனோ ". மற்ற
நாவல்களான "பிரிவோம் சந்திப்போம்", "கற்றதும் பெற்றதும்" என்று என்னை அவர் ஈர்த்த விதம் அவருக்கு நிகர் அவரே.
அடுத்ததாக என்னை கவர்ந்த ஆங்கில நாவல் ஆசிரியர் திரு.சேடன் பகட். அவரது நாவல் எல்லவற்றையும் படித்திருக்கிறேன் "Five Point Someone", "One Night at the call centre","Three mistakes of my Life", " Two States" என்று எல்ல புத்தகமும் எளிய ஆங்கிலத்தில் அழகாக கதைகளை நகர்த்தும் பானி மிக அழகான படைப்புகள் எனலாம்.
இவர் எழுத்தாளர் மட்டுமல்ல பேச்சாளர் என்பதால் இவருடைய எழுது மட்டுமல்லாது இவரது பேச்சையும் ரசிக்கும் ரசிகனானேன். இவரது தனம்பிகை சார்ந்த புத்தகங்கள் என்னை அவரது ரசிகனாக்கியது. " வெற்றி நிச்சையம்", " சொன்னார்கள் சொன்னார்கள்" , " என் கேள்விக்கு என்ன பதில்?" என்று இவரது படைப்பை என் அலமாரியில் அடுக்கியது போல் அடுக்கிகொண்டே போகலாம்.
தமிழ் நாட்டில் பலர் கலெக்டர் ஆவதற்கு இவர் ஒரு துண்டுகோள் என்றே சொல்லவேண்டும். இறையன்பு அவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் என பல பரிமாணங்களை கொண்டவர். இவரை ஒரு முறை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றே சொல்லவேண்டும். இவரது படைப்புகளில் நான் மிகவும் ரசித்தது " ஏழாவது அறிவு" , "வேடிக்கை மனிதர்கள்" என்ற அழகான புத்தகங்கள்.
இவரது புத்தகங்கள் என்னை பலவாறு யோசிக்கவைத்தது இவரது புத்தகம் எனக்கு அறிவை யாசிக்க வைத்தது. இவரது புத்தகங்களில் என்னை கவர்தவை " அப்பம் வடை தயிர்சதம்" ," இனிது இனிது காதல் இனிது", " காதல் அரங்கம்", " கருணை மழை", " சிம்மாசனம்", " இதுதான் காதல் என்பதா" என்று அடுக்கிகொண்டே போகலாம். நான் ரசித்த பலரில் ஒரு சிலர் மட்டுமே கூரமுடிந்தது.
இவர்கள் அனைவரையும் என் உளமார நேசிக்கிறேன். இவர்கள் யாருக்கும் நான் கடிதம் அதிகம் எழுதாத காரணத்தால் இதை கட்டுரையாக எழுதுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக