சனி, ஜூன் 04, 2011

எங்கு போகிறது நம் நாடு?

தவறு செய்தவர்களை விட்டுவிட்டு தவறை தண்டிக்க உண்ணாவிரதம் இருதால் கைது செய்கிறது நமது அரசு. இன்னும் நாம் சுதந்திரம் அடையாத அடிமை வாழ்க்கைதான் வாழ்கிறோம் என்பது இப்போது புரிகிறது. நமது நாட்டை ஆங்கிலேயரிடம் இருந்து பெற்று ஊழல் திருடர்களிடம்  கொடுத்துவிட்டோம்.

முன்பு அன்னா ஹசாரே அவர்கள் உண்ணாவிரதம் இப்போது பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் என்று ஊழலுக்கு ஒவ்வொருவராக உண்ணாவிரதமிருக்க ஊழலை தடுக்கமுடியாத அரசு உண்ணாவிரதம் இருப்பவரை தடுக்கிறது என்றல் ஊழலுக்கு ஆதரவு அளிக் கிறது   என்று எடுத்துக்கொள்ளலாம  என்பது புரியவில்லை. யார் ஆதாயம் தேடுகிறார்கள்? யார் நாட்டுகாக உழைக்கிறார்கள் என்பது புரியவில்லை. எனது கவலையெல்லாம் எங்கே  போகிறது நமது நாடு? என்பதுதான். 2020 ஆம் ஆண்டு வல்லரசு நாடாக இந்திய உருவாகும் என்று நமது முன்னால் குடியரசு தலைவர் நம் மனதில் விதையாக விதைத்தார். இப்போது அந்த விதை
ஊழல் என்னும் கள்ளிச்செடிகள் மறைத்து வளரவிடாமல் தடுக்கிறது. இப்போது கள்ளிச்செடிகள் வேரோடு 
பிடுங்கி வீசப்படுமா மீண்டும் வல்லரசு விதை மரமாக வளருமா என்று வானம் பார்த்த பூமிபோல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக