முன்தினம் என் வாழ்கையில் ஒரு அற்புதமான நாள். அன்று நான் இக்காலத்தை விட்டு கற்காலதிற்கு சென்றுவிட்டேன் காரணம் என் செல்போன் அன்று செயலிழந்துவிட்டது. இப்போது சிலருக்கு இதையம் நின்றுபோனால் கூட கவலைபடுவதில்லை செல்போன் வேலைசெய்யாமல் நின்றுபோனால் வாழ்கையே நின்றுபோவதாய் ஆகிறது.
எப்படியெல்லாம் செல்போன் உபயோகப்படுத்துகிறார்கள் பாருங்கள். இப்படியெல்லாம் ஒரு சதவிதம் கூட செல்போன் இல்லாமல் அந்த ஒரு நாள் எனக்கான நாளாக நான் வாழ்ந்தேன்.
அன்று ஒரு நாள் நான் யாருடைய தொந்தரவும் இல்லாமல் முழு சுதந்திரத்தோடு வேலை செய்தேன்.
அன்று நான் என் வாகனத்தை ஓட்டும்போது மிக கவனமாக வாகனம் ஓட்டினேன். அன்று என் வாகனம் ஓட்டும் அனுபவம் மிக சிறப்பாகவே இருந்தது.
அன்று நான் செல்போன் தொடாத காரணத்தினால் மிக நன்றாக தூங்கினேன். ஒருநாள் நான் செல்போன் உபயோகிக்காத காரணத்தினால் செல்போன் முலம் வரும் cancer எனக்கு ஒரு நாள் ஒத்திவைகபட்டது என்ற ஒரு சின்ன சந்தோசம். ஒரு நாள் நான் அதிகமாய் வாழப்போகிறேன் என்ற உண்மையை உங்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு. ஒருநாள் நான் செல்போன் இல்லாமல் வாழ்த்த வாழ்கையை இன்றுடன் முடித்துகொள்கிறேன். நாளை முதல் செல்போன் பிசாசு என் காதுகளை பதம்பார்க்க காத்திருகிறது என்கின்ற வருத்தத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக