செவ்வாய், ஜூன் 07, 2011

"The Curious Case of Benjamin Button"-என்னை கவர்ந்த படம்

"The Curious Case of Benjamin Button" 8 ஆஸ்கார் அவார்ட் வென்ற படம்.Brad Pitt மற்றும் Cate Blanchett  மிக சிறப்பாக இப்படத்தை  தந்துள்ளனர்.  இந்த படம் ஆரம்பம் முதலே மிக வித்யாசமாக துவங்குகிறது. ஒரு கண்ணில்லாத குருடன் தயாரிக்கும் கடிகாரம் மக்கள் அதிகம் நடமாடும் ரயில் நிலையத்தில் வைக்கபடுகிறது. அந்த பிரமாண்டமான கடிகாரத்தை காண மக்கள் ஆவலுடன் காத்திருகின்றனர். அப்போது கடிகாரம் இயக்கப்படுகிறது அந்த கடிகாரம் முன்னோக்கி நகராமல் பின்னோக்கி நகர்கிறது அந்த வினாடியில் இருந்து கதை
முன்னோக்கி நகர்கிறது. 

ஒரு நகரமே விழக்கோலம் பூண்டிருந்த வேளையில் அந்த நகரத்தின் பெரும் பணக்காரரான Mr. Button என்னும் ஒரு பெரிய பணகாறருக்கு ஒரு மகன் 
பிறக்கிறான் அவன்தான் பெஞ்சமின் பட்டன் என்பது. பிறந்த குழந்தையை பார்க்க பட்டன் ஆவலாக 
வந்து பார்க்கும்போது பெஞ்சமின்  கோரமாக இருக்கிறான்.வெறுத்துப்போன பட்டன் அந்த குழந்தையை ஒரு காப்பகத்தில் விட்டுவிடுகிறார். 
பெஞ்சமின் காப்பகத்தில் வளருகிறான். 10 வயதான பொது பெஞ்சமின் பார்க்க 80 வயது கிழவன் போல் தோற்றமளிக்கிறான். அவனது வளர்ப்பு தாயின் ஆதரவில் பெஞ்சமின் நடக்க முயட்சித்து வெற்றிபெறுகிறான்.


அந்த காப்பகத்திட்கு   தனது பாட்டியைப்  பார்க்க ஒரு பெண் குழந்தை வருகிறது. அவள் பெஞ்சமின் தோற்றம் மட்டுமே கிழவனைப் போல் உள்ளது அனால் பெஞ்சமின் அவள் வயது தான் என்பதை உணருகிறாள். பெஞ்சமினோடு நட்புகொள்வதை அவளது பாட்டிக்குப் பிடிக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு அவள் ஊரிற்கு செல்கையில் பெஞ்சமினை தவறாமல்  கடிதம் எழுத சொல்கிறாள்.


பெஞ்சமின் வளர்ப்பு தாய்க்கு ஒரு குழந்தை பிறக்கிறது அதற்கு பிறகு அவன் தனிமைப்படுதப்படுகிறான் . பெஞ்சமின் காப்பகத்தில் இருந்து வெளியேறி  ஒரு மீன்பிடிக்கும் தொழில் செய்கிறான். அவன் செய்யும் வேலைக்கும் அவன் வயதிற்கும் சம்பந்தமே இல்லை என்பதை உணர்ந்த அவனது முதலாளி அவனுக்கு விசை படகு ஓட்ட கற்றுகொடுகிறார்.
பெஞ்சமின் கொஞ்சம் கொஞ்சமாக முதுமை நிலையில்  இருந்து மாற்றம் பெறுகிறான்.
அவன் உடல் வலுவாகிறது. அவன் அந்த  பெண்ணிற்கு கடிதம் எழுதுவதை நிறுத்தவில்லை.

காலம் செல்லச்செல்ல இளமையாகிகொண்டே வருகிறான் பெஞ்சமின். தன் வளர்ப்பு தாயை பார்க்க காப்பகதிட்கு வருகிறான் பெஞ்சமின். அப்போது அவன் சிறுவயதில் பார்த்த அந்த பெண் அங்கு வருகிறாள். முதல் பார்வையிலேயே 
அந்த பெண் பெஞ்சமினை கண்டு ஆச்சரியப்படுகிறாள்.  இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. அப்போது பெஞ்சமின் அழகை பார்த்து அவனது தந்தை பட்டன் அவனை தான் 
யாரென்று சொல்லாமல் வீட்டுக்கு கூட்டிச் சென்று விருந்து கொடுத்து அவனை அழைத்து பட்டன் உண்மையை சொல்லி மன்னிப்பு 
கேட்கிறார்.அத்துடன் தனது சொத்துகள் அனைத்தையும் பெஞ்சமின் பேரில் எழுதி வைக்கிறார்.    
பெஞ்சமின் அழகான வாலிபனாக உருமாறுகிறான். அப்போது அவன் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை 
பிறக்கிறது.பெஞ்சமின் இன்னும் இளமையாகிறான் அவன் மனைவி முதுமை அடைகிறாள்.
அப்போதுதான் அவனுக்கு புரிகிறது தான் அவளை விட்டு விலகவேண்டும் என்று. தனது சொத்துகள் அனைத்தும் அவள் மனைவி, மகளுக்கு கொடுத்துவிட்டு அவன் இந்திய வருகிறான். 
இப்போது பெஞ்சமின் டீநேஜரைப்போல் மாறிவிடுகிறான். கால சக்கரம் எதிர்முனையாக செயல்படுகிறது.
சில வருடதிற்கு பிறகு அவன் மனைவியை பார்க்க வருகிறான் அப்போது அவன் இன்னும் இளமையாக இருந்தான். அவள் முதுமை அடைந்திருந்தாள். அப்போது அவள் இன்னொருவரை திருமணம் செய்திருந்தால். 

அவளை பார்த்துவிட்டு மறுபடியும் பிரிந்து செல்கிறான். ஒரு நாள் அவளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி 
கிடைகிறது பெஞ்சமின் என்ற சிறுவன் காப்பகதிட்கு வந்திருபதாகவும் அவன் மற்ற விசையம் 
எல்லாம் மறந்துவிட்டதாகவும் சொல்லபடுகிறது. அவள் தன் முன்னால் கணவன் ஒரு சிறுவனாக மாறிவிட்டதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். அவள் பெஞ்சமினிடம் சென்று அவனுக்கு உதவுகிறாள். பெஞ்சமின் சிலநாள் கழித்து கைகுழந்தையாக மாறுகிறான். அதன்  பிறகு அந்த கைகுழந்தை இறக்கிறது. இதை சாகும் தருவாயில் தன் மகளிடம் அவள் தந்தையை 
பற்றிய ரகசியத்தை சொல்லிவிட்டு அவளும் இறப்பதாக  படம் முடிகிறது. இப்படி ஒரு படத்தை 
தமிழில்  எடுத்தால் நன்றாக இருக்கும்.  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக