சனி, ஜூன் 11, 2011

ஆடம்பர திருமணமும்... உடனடி விவாகரத்தும்...


எல்லோர்க்கும் திருமணம் என்றால் மனதில் மகிழ்ச்சிபொங்க ஆயிரம் கனவுகளோடு ஊரார்,உறவினர், நண்பர்கள், கூட படித்தவர்கள்,நமக்கு  பிடித்தவர்கள், சில நமக்கு பிடிக்காதவர்கள், நம்மோடு  வேலை செய்பவர்கள்
குறிப்பாக: "நாம் சைட் அடித்தவர்கள்,நம்மை  சைட் அடித்தவர்கள்" என்று ஒரு பட்டியல் நீண்டுகொண்டே போகும். சில பெற்றோர்களின்  ஒரே குறிக்கோள் அவர்களின் பிள்ளைகளுக்கு ஊர் மெச்சும்படியாக திருமணம் நடத்த வேண்டும் என்பது. அதற்கு முன்பு நாம் பார்க்க வேண்டிய ஒன்று மனமும், மனமும் சேர்வதில்லை பணமும், பணமும் சேர்க்கிறது. இதனால் மானே! தேனே! என்று கொஞ்சுவார்கள் என்று நினைத்தால் கடைசியில் நீயா! நானா! என்று சண்டை போடுகிறார்கள்.
"திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம் அது உண்மையோ இல்லையோ விவாகரத்து கண்டிப்பாக படுக்கை அறையில்தான்  நிச்சயிக்கப்படுகிறது".

ஒரு சின்ன விசயத்தில் ஆரம்பிக்கும் ஒரு வாக்குவாதம். சின்ன சண்டையாகி ஒரு தேவையில்லாத வார்த்தையை விட்டு, பிறகு மனைவி என்ற வாழ்கையே விடும்படியாக ஆகும். ஒரு வீட்டுக்கு இருவாசல் இருக்கலாம் ஆனால் ஒரு வீட்டில் இரண்டு சமையல் அறை இருக்கக்கூடாது.
விவாகரத்தை பற்றி யோசிபவர்களுக்கு ஒரு வார்த்தை உங்களால் வக்கில் கேட்கும் கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியும் ஆனால் உங்கள் குழந்தை கேட்கும் ஒரு கேள்விக்கு கூட உங்களால் பதில் சொல்லமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக