வியாழன், ஜூன் 02, 2011

"ஊழல்" உள்ளக்குமுறல்...




இன்று நாளொரு மேனியும் பொழுதொரு  வண்ணமாய் ஊழல் ஒவ்வொரு துறையாக துகிலுரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊழல் என்னும்  அழுக்குப்படிந்த,  கறைபடிந்த  முகத்தை  பார்க்க பார்க்க ஐயோ! இந்த மனிதர்களை  எல்லாம் நாட்டை நயப்படுத்த பதவியில்  அமர்த்தினால். தட்டை நக்கி தின்னும் நாய்களை போல ஊழல் என்ற நாக்கள் நாட்டை ஒன்று விடாமல் நக்கி தின்றுள்ளதை நினைக்கிறபோது கொதிக்கிறது நெஞ்சம். 


காசுக்கு இப்படி அலையும் குள்ளநரிகளை கடுமையாக தண்டிக்கப்பட  வேண்டும். இன்னும் எத்தனை கோடி பணம் சேர்த்தாலும் பணத்தை பசிக்கு சாப்பிடமுடியாது என்பதை புரியாத பாவிகள்.

பலரது...
உழைப்பை
ஒருவன் உடமையாக்குவதா!

பலரது...
சோற்றை
ஒருவன் செரிப்பதா!

பலரது...
வாழ்கையை-ஒருவன்
அழிப்பதா!

பலரது...
பணத்தை-ஒருவன்
சொத்து குவிப்பதா!

ஓட்டு போட்டவன்...
ஓடாய் தேய்வான்
உக்காந்து தின்றவன்
நாட்டை அழிப்பான்!

இது என்ன நியாயமோ?...
இது எங்குபோய் முடியுமோ?
காலமே இது தகுமோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக