ஞாயிறு, மே 29, 2011

மனிதன் மதத்தை எப்படி பார்க்கவேண்டும்...

இரத்தம் எப்படி மனிதர்களுக்கு ஒரே நிறமோ அதேபோல் மனிதன் வணங்குகின்ற கடவுளும் ஒன்றுதான்.

"ஒன்றே குலம்  ஒருவனே தேவன்".
எல்லா  மதமும் சொல்வது அன்பு காட்டு என்பதுதான் அதை விடுத்து அடுத்த மதத்தினரை கொல் என்றோ,இந்த மதம் தான் சிறந்தது என்றோ  எந்த மதமும் கூறவில்லை.அப்படி கூறினால் அது மதமே இல்லை. அன்போடு வாழு என்று சொன்ன மதத்தின் பேரால் மனிதன் நடதும் நாசவேலைகள் உண்மையில் மதம் பிடித்து அல்ல மதம்பிடித்து என்பதே உண்மை.

 
மதம் மனிதர்கள் வாழ்க்கையை மேன்ம்படுத்தவும்,உயர்த்தவுமே தவிர அடுத்தவரை அழிப்பதற்கு அல்ல. எல்லா  மதத்திலும் கடவுளை வணங்க கைகள் உயர்த்தப்படுகிறது எதற்காக என்றால் மனிதன் அடுத்த மனிதனை உயர்த்திவிடவேண்டும், தூக்கிவிடவேண்டும் என்பதற்க்காகதான்   
எந்த மனிதனும் தன் கைகளை கொண்டு பிறரை தூக்கிவிட வேண்டுமே  தவிர தூக்கி எறியகூடாது. 
யாரை வணங்கினாலும் கோரிக்கை ஒன்றுதான் அது "அமைதி" என்பதுதான். அந்த அமைதி நாம் அமைதியாக 
இருந்தால் மட்டுமே கிடைக்கும். யாரை பழிதீர்த்தும் யாரும் உயர்ந்துவிடமுடியாது. இந்து என்றால் கீதை, கிறிஸ்து  என்றால் பைபிள், முசல்மான் என்றால் 
குரான். மனிதர் என்றால் அன்பு.அந்த அன்பு என்னும் ஒரு வாசகம்தான் எல்லா  மதமும் நமக்கு பிரதிபலிக்கிறது. 

புத்தரும் இதையேதான் போதிக்கிறார். அது "அனைவர்க்கும் அன்புகாட்டு" என்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக