வெள்ளி, மே 27, 2011

தற்கொலை கோழைகள் எடுக்கும் கோழைத்தனமான முடிவு...


தற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் கோழைத்தனமான முடிவு. எப்போது தற்கொலை பற்றிய சிந்தை  வருகிறதோ அப்போது அறிவு முதலில் செத்துவிடுகிறது. அறிவு செத்தால் பிறகு உடம்பு மட்டும் இருந்தென்ன பயன். ஆகையால் உடம்பு அறிவை சாகடித்ததினால் உடம்பு  தனக்கு தானே தண்டனை கொடுப்பதுபோல் சாகடிக்கபடுகிறது.
தற்கொலை பற்றி சிந்தனை  வந்தால் நாம் முதலில் செய்யவேண்டியது என்ன?
  1. தனிமையை தவிர்ப்பது.
  2.  நண்பர்களிடமோ அல்லது நமக்கு பிடிதவர்களிடமோ மனம் விட்டு பேசுவது.
  3. ஏதோ ஒரு நகைச்சுவை படம் பார்ப்பது
  4. மனம் அமைதி அடையும் வரை நமக்கு பிடித்த இடதிற்கு செல்வது.
  5. இசையை ரசிப்பது.
இப்படி உங்களை நீங்களே உட்சாகப்படுத்த  என்ன வழியோ அதை செய்ய வேண்டும். அதை விடுத்து இறப்பது என்பது முட்டாள்கள் கூட செய்ய கூடாத காரியம்.
"தற்கொலை  என்பது தற்காலிக பிரச்சனைக்கு நிறந்தர முடிவு".
 எந்த பிரச்சனைக்கும் தற்கொலை முடிவல்ல தைரியமாக போராடுவதே தற்கொலை பற்றிய சிந்தனையை  தவிர்பதட்கான ஒரே முடிவு. உங்களுக்கு தெரியுமா உயிரோடு இருப்பதை விட தற்கொலை செய்த பின்தான் பிரச்சனை அதிகமாக வரும். நமக்கு எப்போது விதி முடிகிறதோ அப்போதுதான் நாம் அடுத்த நிலையை  அடைய முடியும். அதற்குமுன் இறந்தால் ஆவியாக அலைவோம். எதையும் தொடமுடியாது,சாப்பிடமுடியாது,யாருடனும் பேசமுடியாது. இப்படி ஒரு கஷ்டம்  தேவையா. மரணம் என்பது நம்மை தேடிவரவேண்டும். மரணத்தை நாம் தேடக்கூடாது. வாழ்க்கை என்பது ஒரு முறைதான், வாழ தெரிந்தவர்களுக்கு இங்கேயே 
சொர்க்கம்.வாழ தெரியாதவர்களுக்கு சொர்க்கம் கூட நரகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக