வெள்ளி, மே 20, 2011

கலைஞர் டிவியும் சன் டிவியும் கப்சுப்...




           கனிமொழி கைது செய்யப்படுவது என்ற இரண்டவது இடி கலைஞர் தலையில் விழுந்திருக்கிறது. அவர் சினமா துறையில் 
சல்லாபித்த காலத்தில் திரு M.R ராதா அவர்கள் நடித்த ரத்தகண்ணீர் படத்தை பார்த்திருப்பர் என நம்புகிறேன்
அதில் வரும் பாடல் "குற்றம் புரிந்தவர் வாழ்கையில் நிம்மதி கொள்வதென்பதேது".என்ற பாட்டு
எவ்வளவு பெரிய உண்மை என்பது இப்போது  புரிந்திருக்கும்.

                                          
 கலைஞர் டிவி பிரதானமாய் நம்பியிருந்த மானட மயிலாட நிகழ்ச்சி.இந்த மூவரையும் பாருங்கள் இவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் நீதிபதிகள். இவர்கள் மானை போலவோ, மயிலை போலவோ உங்கள் கண்ணனுக்கு தெரிகிறதா
வேண்டுமானால் குதிரையாட யானையாட என்று வைத்திருக்கலாம். இந்த நிகழ்ச்சி சாதாரண நேரத்தில் ஒளிபரப்பி இருந்தால் இந்த நிகழ்சிக்கு இத்தனை எதிர்ப்பை
காட்டி இருக்க வேண்டியதில்லை . தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடும் போது அது தி.மு.க விட்கு பாதகமாக
இருப்பது தெரிந்ததும் மே-13 அன்று தேர்தல் அறிக்கயை புறம்தள்ளிவிட்டு மானட மயிலாட நிகழ்ச்சியை ஒளிபரப்பியது கலைஞர் டிவி. மக்கள் அந்த நேரத்தில் மானட மயிலாட பார்கவா பல  மணி நேரம்  காத்திருந்தார்கள்.  
இந்த சன் டிவி நித்யனதாவை எவ்வளவு கேவலபடுத்த முடியுமோ  அவ்வளவு கேவலபடுதியது. மக்களில் எல்லாவகையான வயதினரும் டிவி பார்ப்பார்கள் என்ற தன்மையை மறந்து ரஞ்சிதாவையும் நித்யனதாவையும்
கேவலபடுதியதை அனைத்து மக்களும் பார்க்கும் வண்ணம் சன் நியூஸ் தொலைகாட்சியில் போட்டு போட்டு காண்பிக்கபட்டது. ஆனால் இன்று கனிமொழி கைது என்ற ஒரு வாசகம்கூட சன் டிவியோ  கலைஞர் டிவியோ காட்டவில்லை.  நீங்கள் உங்களிடம் தொலைகாட்சி இருகிறது என்று மற்றவரை கிழிதிர்கள். இன்று மற்ற  தொலைகாட்சி கனிமொழி கைது என்று உங்களை  காயபோடுகிறது. இதைதான் பெரியவர்கள் அன்றே
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்றார்கள்.


இனி யாரை குறை சொல்லி என்ன பயண். சிறை என்பது எவ்வளவு சித்ரவதை என்பது தவறு செய்யும்போது யார்க்கும் தெரிவதில்லை. சிறை செல்லும்போதுதான் தெரிகிறது. இப்போது புரிந்திருக்கும்
" உழைப்புக்கு மீறிய பணமும், திறமைக்கு மீறிய புகழும் என்றுமே நிலைக்காது"என்று.
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக