ஞாயிறு, மே 15, 2011

என்னை கவர்த்த 2011 ஆம் ஆண்டு....




          யார் வேலை செய்கிறார்களோ இல்லையோ காலம் தன் வேலையை சரியாக செய்கிறது. காலம்தான் யாருக்காகவும் காத்திருப்பது  இல்லை தன் கடமையை விட்டுகொடுபதும் இல்லை. மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய மிக
முக்கியமான பாடம் இந்த காலதிடம்தான்.அதனால் தான் நம் முன்னோர்கள்
"காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்று குறிபிடுகிறார்கள்.

 போன வருடம் 2010 ஆம் ஆண்டு ஒப்பிட்டால் 2011 மிக நல்ல முறையில் போய் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. இந்த ஆண்டு உழைபவர்க்கு வெற்றியும் மற்றவரை ஏய்த்து பிழைபவர்க்கு மரண அடியுமாக வெற்றிகரமாக போய் கொண்டிருகிறது.


1983 ஆம் ஆண்டுக்கு பின் கிரிக்கெட்யில் இந்தியாவால் ஒரு உலக கோப்பை கூட வெல்ல முடியாமல் தவித்துவந்தது அந்த கனவு நிறைவேறி இருகிறது இந்த ஆண்டு உலக கோப்பை வெற்றி பெற்றதன்முலம். 

அடுத்ததாக ஒசாமா பின் லேடனின் மரணம். இது அமெரிகர்களுடைய பல ஆண்டு 
திட்டம். இவரை கொன்றதன்முலம் அமெரிக்க தனது பலிதிர்த்து கொண்டது. உலகை தனது துப்பாகியின்முலம் ஆட்டிபடைத்த  வன்முறையாளன் அந்த வன்முறையாலே மாண்டு போனான். ஒசாமாவை கொன்றதன்முலம் ஒபாமா தனது பழைய செல்வாக்கினை தக்கவைத்து கொண்டார்.


ஒசாமவிட்கு அடைக்கலம் கொடுத்து உலக நாடுகளிடம் வசமாக மாட்டிகொண்டது பாகிஸ்தான்.  அமெரிக்க படை வந்தது தெரியவில்லை ஒசாமாவை கொன்றது தெரியவில்லை. இதை வாய்திறந்து பேசவும் முடியவில்லை பாகிஸ்தானால்.



அடுத்ததாக ராஜாவின் கைது "அரசியல் பிழைதோருக்கு அறகூட்ருவன்" என்பதற்கு எடுத்துகாட்டாக மக்களால் தேர்ந்தேடுகபட்டு மக்களுக்கு சேரவேண்டிய பணத்தை மொத்தமாக சொரண்டியதன்முலம் சிறை வாசம் அனுபவிக்கிறார்.

"உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்" என்பது நீதி அதை யாராலும் தடுக்க முடியாது இதை முன்பே காலம் யாருக்காகவும் காதிருபதில்லை என்று கூறினேன். தொழில் வேறு குடும்பம் வேறு. தொழிலில் குடும்பத்தையோ, குடும்பத்தில் தொழிலையோ கொண்டுவந்தால் மொத்தமும் போகும்.


 10 வருட பொறுமை ஆட்சியை கைப்பற்றிய பெருமை. இவருக்கு இந்த 2011 ஆம் ஆண்டு ஒரு புதிய பிறப்பாக இருக்கும். காலம் தன் கடமையை சரியாக செய்கிறது. தவறு செய்தவர்களை காலமும் காலனும் விட்டுவைபதில்லை.

இதைத்தான் "முற்பகல் செயின் பிற்பகல் விளையும்" என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள் போலும். இதை புரிந்துகொண்டு மனிதன் தன் கடமையை சரிவர செய்தால் போதும் காலம் தன் இதையத்தில் அவர்களின் பெயரை தன் நெஞ்சில் பச்சை குத்திகொல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக