செவ்வாய், மே 17, 2011

பட்டாம்பூச்சியின் பதில்...




       இந்த பட்டாம்பூச்சிகள் தான் எவ்வளவு அழகானவை.பார்க்கும் ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் ஒவ்வரு வண்ணத்தில்
நம் நெஞ்சை கொள்ளைகொள்கிறது. இந்த பட்டாம்பூச்சிகள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது என்று ஒரு நத்தைக்கு   சந்தேகம் வந்து.
அந்த நத்தை பட்டாம்பூச்சியிடம்   சென்று "நீ ரொம்ப அதிஷ்டசாலி எல்லோரும் உன்னை
பார்த்து ரசிகிறார்கள். எப்படி நீ இவ்வளவு அழகாக இருகிறாய்? என்று கேட்டது".
உடனே பட்டாம்பூச்சி நத்தைக்கு பதில் சொன்னது. இதற்கு முன் நான் கம்பிளிபுளுவாக ஒரு அறுவருக்கத்தகும்படியான கோலத்தில் இருந்தேன். யார் என்னை இன்று ரசிகிறார்களோ அவர்கள்தான் அன்று என்னை கண்டு வெறுத்தார்கள். என் தோற்றம் கண்டு என்னை
கொல்லவும் முயற்சித்தார்கள். அப்போது என் மனதிற்குள் நினைத்து கொண்டேன்.
யார் என்னை இன்று  வெறுக்கிறார்களோ  அவர்கள் ஒரு நாள் என்னை பார்த்து ரசிக்கும்படி செய்ய வேண்டும் என்று என் மனதில் மீண்டும் மீண்டும் கூறிவந்தேன். என் மனதில் அது ஆழ பதிந்துவிட்டது. ஒரு நாள் எனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன்.

எனக்குள் இருந்து சிறகுகள் முளைத்தன.முதலில் அந்த வலியை என்னால் தாங்க முடியாமல் அழுதேன் என் கண்களை இறுக முடிகொண்டேன் . கொஞ்ச  நேரம்கழித்து எனது
வலி குறைத்ததுபோல் இருந்தது. மெல்ல கண்திறந்து பார்த்தேன் என் இருபக்கமும் சிறகுகள் முளைத்திருந்தது.எனக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என் மேனிகூட ரொம்ப பளபளப்பாக இருந்தது. ஒவ்வரு முறையிம் என் தோற்றத்தை ஏன் இப்படி படைத்தாய் ஆண்டவா என்று முறையிடுவேன்.
இப்போது நான் அழகானது மட்டுமில்லாமல் என்னால் வானத்தில் சிறகடித்து பறக்கவும் 
முடிகிறது. எனவே நத்தை தோழா என்னை பார்த்து பொறமை படாமல் நீயும்  முயற்சித்தால் உன்னாலும் சாதிக்க முடியும். என்று கூறிவிட்டு வானத்தில் பறந்து சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக