நாம் எந்த காலத்திலும் காலத்தை வெல்ல முடியாது. காலத்தை வென்றதாக நினைப்பது முட்டாள்தனம்.அந்த முட்டாள்தனம்தான் தன்னை அறிவாளி என நினைக்கும் பலர் செய்கிற வேலை. காலம் என்பது நம் பிறபிட்கு முன்பும் இருந்தது நமது இறபிட்கு பின்பும் இருக்கபோவது. இதைத்தான் கீதையில் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். அவர் கூறுவது இதுவே "பார்த்த உடல் அழியபோவது ஆனால் ஆத்மாவை யாராலும் அழிக்க முடியாது. யார் ஆத்மாவை கொன்றதாக நினைகிறானோ அல்லது கொல்லப்பட்டதாக எண்ணுகிறானோ அவன் முட்டாள்.ஆத்மாவை யாராலும் அழிக்கமுடியாது".
இந்த உலகில் யாராலும் எந்த பொருளையும் புதிதாய் உருவாக்க முடியாது. வேண்டுமானால் உருமாற்றாலம்.அதுதான் இங்கு நிகழ்த்து கொண்டிருகிறது.
இதை அர்ஜுனன் புரிந்துகொண்ட பிறகுதான் பரமாத்மா தன் விஸ்வரூபத்தை காண்பித்தார். இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமானதல்ல. எந்த ஒரு மனிதனாலும் இதைபோன்ற பூமியை சிரிஸ்டிக்க முடியாது. ஒன்றை அழிப்பது சுலபம், உருவாக்குவது கடினம். ஒன்றை உருவாக்குதல் என்பது காலத்தால் மட்டுமே உருவாக்க முடியும்.
காலம் என்பது பல லட்சம் கோடி கணினியின் திறன் கொண்டு சுயமாய் இயங்கும் ஒற்றை பிம்பம். திறனரியா மனிதன்
தன்னை கடவுளாக எண்ணுகிறான்,அந்த எண்ணம் கூட காலம் அவனுக்கு இட்ட பிச்சை. உலகில் உள்ள
அனைத்து உயிர்க்கும் இதை அறிய வாய்ப்பில்லை என்றாலும் மனிதன் அதை உணர முயற்சிக்கலாம்.உண்மையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்த்தும் ஒரு வாசகம்தான் "இதுவும் கடந்து போகும்". எல்லாமே நம்மை விட்டு கடந்து போககூடியவை நமது இன்பம்,துன்பம்,பசி,
வெற்றி,தோல்வி,புகழ்,விரக்தி,இளமை,அழகு என்று எதுவுமே நம்மோடு நிலைத்திருக்க போவதில்லை.
நிலையானது என்று ஒன்று உண்டு என்றால் அது காலம் நமக்கு தந்த ஆத்மா மட்டுமே.
ஆகவே தீமை செய்வதை விட்டுவிட்டு உண்மையை தேடுவோம். எனவே நமது காமம்,குரோதம்,லோகம்,மோகம்,மதம்,மாச்சரியம் என்ற ஆறு தீய குணங்களும் நம்மை விட்டு இப்போதே கடந்து போகட்டும். அன்பு,நெறி,பண்பு,பக்தி,நட்பு,நல்லயேண்ணம் ஆகியவை ஆறும் நம்மோடு நிலைக்கட்டும்.
கடப்பவை கடக்கட்டும்,நம்மோடு நிலைப்பவை நிலைக்கட்டும். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்.அப்போதுதான் நியாயம் பிறக்கும்.பகவானின் அருள் நம்மை லயிக்கும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக