பெட்ரொலிய பொருட்களின் விலை உயர்வு நடுத்தர மக்களின் மனக்கதறலாகிவிட்டது. மக்களின் இயல்பு நிலையை மாற்றிவிடுவதோடு பணவீக்கத்தை
அதிகரிக்க காரணமாகிவிட்டது. லிட்டருக்கு ஒரு ருபாய், இரண்டு ருபாய் என்று அதிகமான நிலை மாறி இப்போது ஐந்து ருபாய் உயர்ந்து மக்களின்
கழுத்தை நெரிக்கிறது.பெட்ரோலின் விலை உயர்வை அந்தந்த பெட்ரோலிய நிறுவனமே உயர்த்திக்கொள்ள அரசு ஆணை பிரபித்திருகிறது.
சர்வதேச கச்சா எண்ணை விலை உயர்த்தும்போதல்லாம் பெட்ரோல் விலை உயர்த்தபடுகிறது.ஆனால் கச்சா எண்ணை குறைக்கப்பட்டால் பெட்ரோல் விலை குறைக்கப்படுவதில்லை. சில பெட்ரோல் பங்குகள் பெட்ரோல் விலை உயர்கிறது என்று தெரிந்ததும். பெட்ரோல் தருவதை நிறுத்திவிட்டு. விலை உயர்வு அறிக்கை வந்த பிறகு பெட்ரோல் தருவதுமாக வேடிக்கை காட்டி உள்ளது.
இதனால் பெட்ரோல் பங்க் முன்பு கூட்டம் அலைமோதியதை படத்தில் காணலாம். சில பெட்ரோல் பங்க்கலீல் பெட்ரோல் போடுபவர் நம்மிடம் பேச்சு குடுத்து நம் கவனத்தை திசைதிருப்பி குறைந்த அளவு பெட்ரோலை நமக்கு கொடுத்து ஏமாற்றி விடுகிறார்கள். மக்களும் அதை பற்றி தெரியாமல் சில நேரம் ஏமாந்து விடுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வு எவ்வளவு வலிமிக்கதோ அதைவிட வலி அதிகமானது பெட்ரோலின் அளவை குறைத்து திருடி சம்பாதிக்க விடுவது. நம்மால் பெட்ரோல்
விலை உயர்வை தடுக்க முடியாவிட்டாலும். நம்மை ஏமாற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர் செய்யும் திருட்டுதனத்தை
சற்று கவனமாக இருந்து தவிர்க்கலாம். எதிர்காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வரும் நிலை உள்ளதால் தேவையில்லாமல் பெட்ரோலை உபயோகிப்பதை நிறுத்தினாலே நமக்கும், நாடிட்கும் நிறைய மிச்சமாகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக