வானம் படம் பார்க்கும் முன்பு எந்த எதிபார்ப்பும் இல்லாமல் பார்த்ததினால் வானம் படம் என்னை வசபடுதியது. இது சிறுபிள்ளைகள் பக்குவமில்லாமல் அம்மா,அப்பா விளையாட்டு விளையாடுவது போல் இல்லாமல். உணர்வின் தன்மையை வெளிபடுத்தும் விதமாக இருந்தது இந்த படம்.
ராக் இசையோடு படத்தில் அறிமுகமாகும் பரத் இன்றைய இளைய தலைமுறையின் சமுதாய பொறுப்பின்மையாக காட்டப்பட்டு பின் அனுபவ பாடத்தினால் சமுதாய பொறுப்புள்ள இளைகனாக மாறுவது நல்ல திருப்பம்.
படத்தில் எல்லோரையும் விட சரண்யா அவர்களின் நடிப்பு எல்லோரையும் மிஞ்சிவிட்டது.கிராமத்து தாயாக இப்போது இவரை விட்டால் ஆளே கிடையாது என்னும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த படத்தில் கொஞ்சம் அடக்கி வாசிததினால் சிம்பு சில இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.
அனுஷ்க கவர்ச்சி மட்டுமே கடைசி வரை காடபட்டதல் நடிப்பை கவனிக்க முடியாமல் போனது. விலைமாதரய் சளைக்காமல் நடித்திருக்கிறார்.
மொத்தத்தில் வானம் ஒரு சமுதாய கட்டமைப்பில் உள்ள குளறுபடியான மனிதர்களை அவர்களின் பண தேவையை மையபடுத்தி. பணமில்லாமல் வாழ்கை இல்லை என்ற கோட்பாட்டை காண்பித்து கடைசியில் பணமே வாழ்கையில்லை பிறர்க்கு உதவுவதுதான் வாழ்க்கை என்று அழகாக புரிய வைக்கிறது. வானம் மக்களை வசப்படுத்தி வாழ்த்துகளையும் பெறுகிறது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக