"மகாகவி சுப்ரமணிய பாரதி" சொல்லும்போதே தேன் வந்து பாயுது காதினிலே. காதல்,பக்தி,தேசபக்தி என்று கவிதைக்கு இலகனமாக திகழ்ந்தவர் அல்லவா பாரதி.
புகலென்னும் மாலை அணித்தும் துளி கர்வமில்ல கவிஞன் பாரதி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். ஆனால் பசியிலும் பண்பை மறக்கவில்லை. தன் உணவை பறவைகளுக்கு பகிர்ந்தளித்தார்.
" காக்கை குருவி எங்கள் ஜாதி" என்றார்.
"பெண் விடுதலை வேண்டும்" என்றார்
சுதந்திரம் கிடைக்கும் முன்பே சுதந்திரம் கிடைத்து விட்டதாக பாட்டுபாடியவர் அல்லவா அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதில் எந்த தவறும் இல்லை.
" பாரதி நீ...
பரவிக்கிடக்கும்- இந்தியாவின்
சுதந்திர தீ!
சுதந்திர பயிரின்...
விளைச்சலுக்கு காரணமான
விதை நீ!
பெண் விடுதலைக்கான...
விடிவெள்ளி
நீ!
நின் கவி...
காலத்தை கடந்து
நிற்பது!
நிரந்தரமில்லாத...
உலகத்தில்
நிரந்தரம்
நின் புகழ்!
நின்...
புகழ் எட்டு திக்கும்
ஒலிக்கும் என
கொட்டு முரசே!"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக