இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்கள் எத்தனையோ படங்கள் என்னும் பொக்கிசங்களை நமக்கு அளித்தவர்.
பல நடிகர்,நடிகைகளை நமக்கு அறிமுகபடுதியவர். இவரது படங்கள் காலத்தை வென்றவை என்று சொன்னால் அது மிகையாகது. பாலசந்தர் அவர்கள் ஒரு சகாப்தம். அவர்க்கு "தாதா சாகிப் பால்கி" விருது கிடைத்திருப்பது என்னை மகிழவைத்தது. அவரது படங்கள் நான் எத்தனை முறை பார்த்தேன் என்பதை நினைவில் வைத்துகொள்ள முடியாத அளவுக்கு அவரது படங்கள் இருப்பது ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
எனக்கு பிடித்த அவரது படங்கள் எதிர் நீச்சல்,அவள் ஒரு தொடர்கதை, தில்லு முள்ளு,சிந்து பைரவி,புன்னகை மன்னன் இப்படி அடுக்கிக்கொண்டு போகலாம். அவரது படத்தை ரசித்தது போல் அவரது டிவி சீரியல் எல்லாவற்றிற்கும் நான் ரசிகன். காதல் பகடை, கையளவு மனசு, ஜென்னல் என்று அவர் படைப்பு பல காயம்பட்ட மனிதர்கள் மனதிற்கு சிறந்த மருந்து.
"எதிர் நீச்சல்" இப்படி ஒரு படத்தை அவரை தவிர யாராலும் எடுக்கமுடியாது. அதில் வரும் நாகேஷ் அவர்களின் "சீனு" என்னும் கதாபத்திரத்தின் நடிப்பு மெய்சிலிர்க்க வைத்த ஒன்று. ஒரு கதாபத்திரத்திரம் எப்படி கையாலப்பட வேண்டும் என்பதை தெளிவாய் காட்டி இருப்பார் பாலசந்தர் அவர்கள்.அதில் ஒரு கதாபத்திரத்திரம் "இருமல் தாத்தா" என்பது.அந்த கதாபத்திரத்திரம் கடைசி வரை காட்டப்படாமல் வெறும் வசனங்கள் மூலமாக காட்டிய விதம்
அந்த யுக்தி என்னை பரவசபடுத்தியது. அவர் மேலும் மேலும் விருதுகள் பெறவேண்டும் என்ற விருப்பத்தோடு வேண்டிகொள்கிறேன்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக