உலகம் துவங்கிய அன்று முதல் இன்று இந்த நிமிடம் இந்த நொடிவரை பெண்களுக்காக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் கண்டும் காணாமலும்மே உள்ளது. பெயர் வைத்தோம் நதிக்கு கங்கை என்றும் யமுனை என்று. பெயர் வைத்ததுனலே பெண்களை மதிக்கிறோமா என்றால் இல்லை. ஆணாதிக்கம் பெண்களை வெறும் சதை பிண்டமாகதான் பார்க்கிறதே தவிர உயிருள்ள ஆத்மாவாய் பார்கவில்லை. ஒரு சில ஆண்களுக்கு தன் தாய், மனைவி,மகளை தவிர மற்ற பெண்கள் எல்லாம் சதை பிண்டங்கள் போல் இடிப்பதும், பாலியல் தொந்தரவு செய்வதும் வாடிக்கையாகி விட்டது. பெண்ணை அடிமையாக்கி அடிமையாக்கி அவர்கள் அறிவை செயல் படாமல் வீட்டுகுள் பூட்டி வைத்திருந்தோம். இப்போதுதான் பெண்கள் தங்களுடைய அடிமை விளங்கை உடைத்துவிட்டு படிக்கவும் வேளைக்கு செல்லவும் வெளிபடுகிறார்கள்.
அவர்களை நிம்மதியாக வேளை செய்ய விடுகிறார்களா இந்த கேவலமான ஆண்கள் என்பதை பாருங்கள்.
அவர்களை நிம்மதியாக வேளை செய்ய விடுகிறார்களா இந்த கேவலமான ஆண்கள் என்பதை பாருங்கள்.
இனியாவது பெண்களை தோழியாக, சகோதரியாக,மகளாக பாருங்கள். இன்று நீங்கள் செய்கிற தவறு நாளை உங்கள் மகளுக்கோ,மனைவிக்கோ நேர்ந்தால் அதை உங்களால் ஏற்றுகொள்ள முடயுமா என்பதை யோசித்து செயல்படுங்கள். பாரதி கண்ட புதுமை பெண்களை உங்கள் கேவலமான புத்தியால் மீண்டும் அவர்களை வீட்டுக்குள் அடைத்துவிடாதிர்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக