இதுவரை அரசியலை சரியாக புரிந்துகொள்ளாத பலர் பல காரணத்தினால் அரசியல் ஏதோ நமக்குதொடர்பில்லை என்பதைப்போல ஒதுங்கிவிட்டனர்.நல்லவர் ஒதுங்கும்போதே தீயவை தஞ்சம் புகுகின்றன.அரசியல் என்பது மக்களை நல்வழிபடுத்த ஒரு சமுதாய இயக்கம். ஆனால் சினிமா என்பது ஒரு சமுதாய இயக்கம் அல்ல அது மக்களை மகிழ்விக்க வந்த ஒரு துறை மட்டுமே. அனால் காலம் மாறிவிட்டு அல்லவா! இப்போது சினிமா தயவு இல்லாமல் அரசியல் நடபதில்லை என்பதை போலும் அரசியல் இல்லாமல் சினிமா இல்லை என்பதை போலும் மாயை ஏற்படுத்தபட்டுள்ளது ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு கட்சி நடத்த பணமும் மக்கள் செல்வாக்கும் தேவை என்பதால் சினிமா என்னும் ஊடகம் அரசியலுக்கு பயண்படுகிறது.அதேபோல் ஒரு படம் நடித்து பிரபலமாகிவிட்டாலே அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒரு அரசியல் கட்சி துவங்குவது சாதார்னமகிவிட்டது .என்ன கொடுமை என்றால் மக்கள் முன் அரசியல்வாதிகள் நன்றாக நடித்து ஓட்டு வாங்கமுயற்சிகின்றனர்.அதேபோல் நடிக்கத் தெரியாத நடிகர்கள் அரசியல் சாயம் பூசிக்கொண்டு அரசியலில்
பிரவேசிக்கிறார்கள். எப்போது மழை வருமோ எப்போது அவர்கள் சாயம் வெளுக்குமோ தெரியாது.
இப்படி நாடு போய்கொண்டிருப்பதை மக்கள் எழுச்சியால் மட்டுமே கேள்வி கேட்க முடியும்.
படத்தில் நடிக்கும் நடிகர் வேறு, கட்சி துவங்கிய அதே மனிதர் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நடிகரை நடிகராக பார்க்கவேண்டும். அதே மனிதர் அரசியலுக்கு வந்தால் அவர் நல்லவரா என்று பார்த்து ஓட்டு போடவேண்டும் அவர் பேசிய பஞ்ச் வசனத்துக்காக
ஓட்டு போடகூடாது என்பதும் அதேபோல் ஒரு அரசியல்வாதி வார்த்தைக்கு மயங்காமல் அவர் செய்த செயலுக்காக
ஓட்டு போட்டால் மட்டுமே நாடு முன்னேறும்.
"நாட்டுகொரு செய்தி சொல்ல நாகரிக கோமாளி வந்தேனுங்க. வார்த்தை தேடி கட்டுரை எழுதி ஆழமான கருத்து சொல்ல வந்தேனுங்க".
ஓட்டு போடகூடாது என்பதும் அதேபோல் ஒரு அரசியல்வாதி வார்த்தைக்கு மயங்காமல் அவர் செய்த செயலுக்காக
ஓட்டு போட்டால் மட்டுமே நாடு முன்னேறும்.
"நாட்டுகொரு செய்தி சொல்ல நாகரிக கோமாளி வந்தேனுங்க. வார்த்தை தேடி கட்டுரை எழுதி ஆழமான கருத்து சொல்ல வந்தேனுங்க".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக