இந்த தேர்தல் பல வகையில் வித்யாசமான தேர்தலாக அமைத்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை. அம்மா ஜெயித்து, அய்யா தோத்து எங்கள் அண்ண எதிர்கட்சியாகி ஒரே கல்லுல மூணு மாங்க. இதை T . R பாணில சொன்ன.
அம்மா செய்தது வியுகம்...
அய்யா முகத்துல சோகம்
அண்ணன் காட்றாரு வேகம்
வானத்துல பறக்குது காகம்!
எ டண்டனக! டனகுனாக!
சரி சீரியஸா பார்த்தாலும் அம்மா 148 இடம் வெற்றி, இந்த காலகட்டத்துல ஒரு ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை என்பதை உணர்த்த மக்கள் ஆட்சியை மாற்றியது வரவேற்கதக்கது. 10 வருட பொறுமை அம்மாவை மனமுதுர்சியை ஏற்படுத்தியதா? என்பதை
வரபோகும் நாட்களில் பார்க்கலாம். தி.மு.க தோற்பது யாருக்கு சோகம் அதிகம் இருக்குமோ
இல்லையோ இவருக்கு கண்டிப்பாய் சோதனை இருக்கும் என நம்பலாம்.
படத்தில் எல்லோரிடமும் அடிவாங்கி பழக்கபட்ட திரு.வடிவேலு அவர்கள் சொந்த டைலாக் பேசி நிஜ வாழ்விலும் அதே போல் நடந்திருக்கிறார். இப்போது கேட்டால் நடித்திருக்கிறேன் என்பர். இவர்களுக்கு வள்ளுவர் என்ன சொல்றார்
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறதே
நாவினால் சுட்ட வடு"
இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னன்னா "இந்த தேர்தல் முடிவு எதிர்பார்த்தபடி இனிதே முடிந்தது அதற்கு தேர்தல் அதிகாரிக்கு நன்றி சொல்லிக்கொண்டு எல்லோரும் அவங்கவங்க வேலையை பார்க்கலாம்"
மீண்டும் அடுத்த ப்ளாக்ல சந்திப்போம்.
நன்றி! வணக்கம்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக