காதலை பற்றி சொல்லாத தமிழ் படங்களும் இல்லை...
காதலை பற்றி கவிதை எழுதாத கவிஞரும் இல்லை
காதல் என்பது அறிவியல் வரையில் அது எல்ல உயிர் இனங்களை போல் மனிதனுக்கும் படைக்கப்பட்ட ஒரு இயற்கை உணர்வு.
ஆனால் மனிதனுக்கு அது மிக முக்கியமான உணர்வு காதல்...
இந்த காதல் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் இல்லை இந்த உணர்வு நமக்கு இடையில் வந்த உணர்வுதான். முந்தைய அதாவது ஆரம்ப காலத்தில் ஒரு ஆண் ஒரு பெண் இருவருக்குள்ளும் இருந்தது முதலில் அவரவர் பசியை போக்குவது, இரண்டவது தன்னை போல இன்னொரு சந்ததியை உருவாகுவது. இப்படி இடைவிடாது போய்
கொண்டிருந்த ஆண்,பெண் உறவு கால மற்றதால் அல்லது மனதின் முதிர்ச்சியால் பெண்ணுக்குஒரு ஆணை மட்டும் பிடித்திருந்தது. அதே போல் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை மட்டும் பிடித்திருந்தது.
அது தான் காதல் என்ற வழக்கத்துக்கு வந்தது.
சரி எத்தனையோ அழகான பெண்ணை ஒரு ஆணும். எத்தனையோ ஆண்களை ஒரு பெண்ணும் பார்க்கும் பொது எது அந்த ஒரு நபரை மட்டும் ஈர்க்கிறது காதலிக்க தோன்றுகிறது. இதை பற்றி அறிய அவரவர் செல் மற்றும் க்ரோமோசோம்குள் தான் பார்க்கவேண்டும். அவரவர் ரசனைகேட்ப யார் அவர்களை கவர்கின்றனரோ அவர்கள் மீது காதல் வருகிறது
எனலாம். சிலருக்கு நினைப்பது கிடைபதுண்டு அந்த சிலரில் சிலருக்கு மட்டுமே
கடைசிவரை நிலைபதுண்டு. பலருக்கு நினைப்பது கிடைபதில்லை ஆனால் கடைசிவரை அதை பற்றி நினைத்து அந்த பலர் அழுவதில்லை. காரணம்
"நினைபதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை"
என்று கண்ணதாசன் கவி பாடியிருக்கிறார்.
காதல் ஒருவித ஈர்ப்பு அது பருவ வயதில் வருவது இயல்பு. எந்த காதல் யார்மிது காதல் இருந்தாலும் அது
நம் இறுதிவரை நாம் இறக்கும்வரை வருமோ அதுதான் உண்மையான காதல்.அந்த
காதல் உடலை தாண்டி உணர்வின் அடிப்படையில் இருக்கவேண்டும். அப்படி காதலித்து பாருங்கள் வாழ்கையின் உண்மையான அர்த்தம் புரியும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக